ஹேண்ட் பேக் வாங்குவதற்கு முன் இதை தெரிந்து கொள்ளுங்கள்..
பெண்கள் பயன்படுத்தும் உபகரணங்கள் பல இருந்தாலும். அதில் ஹேண்ட் பேக்கிற்கு தனியிடம் உண்டு.
வேலைக்கு செல்லும் பெண்ணாக இருந்தாலும் சரி.., வெளியே செல்லும் பெண்களாக இருந்தாலும் சரி. தேவையான பணம், பொருள் என அனைத்தையும் அதில் வைத்து தான் எடுத்து செல்வோம்.
இப்படி எல்லாம் இடத்திலும் பயன்படுத்தும் ஹேண்ட் பேக்கை கலர், விலை, மட்டும் பார்த்து வாங்குவது சரியா..?
தரமான ஹேண்ட் பேக்கை எப்படி வாங்குவது. இதை தெரிந்துக்கொள்ளுங்கள். அடுத்த முறை வாங்குவதற்கு உதவியாக இருக்கும்.
ஹேண்ட் பேக் தரமானத என்பதை பார்பதற்க்கு, கைப்பிடி முக்கியமான ஒன்று. கைப்பிடி நம் கைகளால் பிடிக்கும் அளவிற்கு இருக்கிறதா என பார்த்துக் கொள்ளவும்.
ஹேண்ட் பேக்கின் எல்லாம் பக்கங்களிலும் தையல் போட்டு உள்ளதா என சரி பார்க்க வேண்டும்.
நீங்கள் எந்த இடத்திற்கு கொண்டு செல்லப்போறீர்களோ, அதற்கு ஏற்றவாறு பார்த்து வாங்க வேண்டும். உதாரணமாக வேலைக்கு கொண்டு எடுத்து செல்பவர்கள் உணவு, file, மொபைல் போன் வைக்கும் அளவிற்கு இருக்கிறதா என பார்த்துக்கொள்ளவும்.
சிலர் மாடர்ன் ஆக வாங்க நினைக்கும் பெண்கள், சிறிய ஹேண்ட் பேக்கை வாங்குவார்கள். தோலில் மாட்டும் பிடி, சரியாக உள்ளதா தையல் விட்டுள்ளதா என உறுதி செய்துக்கொள்ளவேண்டும்.
ஹேண்ட் பேக் தோல் பளபளப்பாக இருந்தால், அந்த லெதர் உண்மையானதா இல்லை கலப்படமா என பார்க்கவேண்டும். போலி லெதரில் தோல் சீக்கிரம் உரிந்து விடும். எனவே ஹேண்ட் பேக்கின் உள்ளேயும். தோல் விடுபட்டுள்ளதா என பார்த்துக்கொள்ள வேண்டும்.
காசு கொடுப்பதற்கு முன் , அதற்கு வாரண்டி ( Warranty ) கார்டு தருகிறார்களா என கவனம் செலுத்தி, தரமான ஹேண்ட் பேக் வாங்க தொடங்குங்கள்.