ஜாதியை தெரிந்தகொள்வதா ஒரு கட்சிக்கு பெருமை..? ராகுல் காந்திக்கு கனிமொழி குரல்..!
லோக்சபாவில் பாஜக எம்பி அனுராக் தாக்கூர் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியின் ஜாதி குறித்து கேட்டதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அது தொடர்பாக லோக்சபாவில் திமுக நாடாளுமன்ற எம்பி கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும் ஜாதி என்பது பெருமை என்று சொல்லக் கூடிய ஒரு ஆட்சியை, ஜாதி தெரியாதவர்களை இழிவுபடுத்தி பேசுவது அதனை பாராட்டக்கூடிய ஒரு பிரதமரை ஜாதி ரீதியாக உருவாக்கக் கூடிய பாடத் திட்டத்தை தமிழ்நாடு ஒரு போதும் ஏற்காது என கனிமொழி எம்.பி தெரிவித்துள்ளார்.
கனிமொழி எம்.பி கேள்வி :
ஒவ்வொரு ஆண்டும் உயர்கல்விக்கு நீங்கள் ஒதுக்க வேண்டிய நிதியைக் குறைத்துக் கொண்டே வருகிறீர்கள். தமிழ்நாட்டில் ஒரு மாணவன் படித்தாலும் அந்த பள்ளியை நாங்கள் மூடுவது இல்லை. அப்படி இருக்க அதிகமான மாணவர்கள் இல்லை என்ற காரணத்தால் அந்த பள்ளியை மூடிவிட்டு., அங்கிருந்து அதிக தொலைவில் உள்ள மற்றொரு இடத்திற்கு மாணவர்களை மாற்றினால் அவர்களால் எப்படி கல்வி கற்க முடியும்.. என கேள்வி எழுப்பினார்.
சகோதரியாக குரல் :
திராவிட மாடல் இயக்கம் ஜாதி என்ற கட்டமைப்பை உடைக்கப் போராடுகிறது. நீதிக்கட்சியின் முதல் இன்றைய முதல்வர் ஸ்டாலின் வரை போராடி கொண்டு தான் இருக்கிறோம். ஒரு தாய், தந்தை, சகோதரியின் இடத்தில் இருந்து இந்த கருத்தை மிக வருத்தத்துடன் பதிவு செய்கிறேன்.
உன் ஜாதி என்னவென்று உனக்கு தெரியுமா..? என பலரின் முன்னிலையில் பாஜக எம்பி அனுராக் தாக்கூர்., காங்கிரஸ் எம்பியிடம் கேட்கிறார். ஒருவருடைய ஜாதி என்ன என்பது பற்றி தெரிந்து கொள்வதில் உங்களுக்கு என்ன பெருமை இருக்கிறது..? “ஜாதியை பற்றி தெரிந்துக்கொள்வதில் பெருமை இல்லை.. ஜாதி அற்றவராக வாழ்வதில் தான் பெருமை”.
ஜாதி அற்றவராக தான் வாழ்வது தான் திராவிட இயக்கத்தின் கொள்கை. அதைவிட வருத்தப்படக் கூடியது, அந்தப் பேச்சை ஆதரித்து பாராட்டி இந்த நாட்டின் பிரதமர் பேசுகிறார். ஜாதி என்பது பெருமை என்று சொல்லக் கூடிய ஒரு ஆட்சி, ஜாதி தெரியாதவர்களை இழிவுபடுத்துவதை ஏற்கக் கூடிய ஒரு பிரதமர் உருவாக்கக் கூடிய பாடத்திட்டத்தை தமிழ்நாடு ஒரு போதும் ஏற்காது. எங்கள் முதலமைச்சர் ஸ்டாலின் அதற்காக கடைசி வரை போராடுவார். நாங்களும் அவருடன் சேர்ந்து போராடுவோம். என கனிமொழி எம்.பி இவ்வாறே பேசினார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..