‘2 ரூபாய்க்கு முகக்கவசம்’ கொச்சி மருந்துக்கடையை பாராட்டும் மக்கள்!

கொச்சியில் உள்ள மருந்தகம் ஒன்று முக கவசம் ஒன்றை 8 முதல் 10 ரூபாய்க்கு கொள்முதல் செய்து வெறும் 2 ரூபாய்க்கு தான் விற்பனை செய்து வருகிறது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் மிகப்பெரிய அளவில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு மாநிலங்களில் இந்த கொரோனா வைரஸால் தற்போது வரை 85பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கொரோனா வைரஸ் தாக்கப்பட்ட 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த கொரோனா வைரஸ் தாக்கம் வேகமாக பரவி வருவதால் முகக்கவசங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதில் முதன்மையான என்.95 முகக்கவசம் ஒன்று 200 ரூபாய் வரைக்கும், 3 அடுக்கு கொண்ட முகக்கவசம் ஒன்று 50 ரூபாய் வரைக்கும், சாதாரண முகக்கவசம் ஒன்று 30 ரூபாய் வரைக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதிலும் கேரளாவில் கொரோனா வைரஸ் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், பல இடங்களில் நிலவும் முக கவசங்களுக்கான தட்டுப்பாடை பயன்படுத்தி ஒரு முகக்கவசம் 20 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

இப்படி முககவசங்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படும் நிலையில் கொரோனா அதிகம் பாதித்த மாநிலங்களில் ஒன்றான கேரளா மாநிலம் கொச்சியில் உள்ள மருந்தகம் ஒன்று முக கவசம் ஒன்றை 8 முதல் 10 ரூபாய்க்கு கொள்முதல் செய்து வெறும் 2 ரூபாய்க்கு தான் விற்பனை செய்து வருகிறது.

இதுகுறித்து பேசிய மருந்துக்கடை உரிமையாளர்,” 8 ஆண்டுகளாகவே இதுபோன்று விற்பனை செய்து வருகிறோம்.இதன் மூலம் சாதாரண மக்கள், மருத்துவமனை பணியாளர்கள், சிகிச்சை பெறுவோர் பெரிதும் பயன் அடைகின்றனர்” என்று கூறியுள்ளார். இந்த மாதிரியான இக்கட்டான சூழலில் தட்டுபாடில் இருக்கும் அத்தியாவசியமான பொருட்களை அதிக விலையில் விற்கவே அனைவரும் முனைப்பு காட்டும் நிலையில் இவர்களது இந்த சேவையை பலரும் பாராட்டி வருகின்றனர்.

What do you think?

கொரோனா எச்சரிக்கை – பத்ம விருதுகள் விழா ஒத்திவைப்பு

‘அதிபர் டிரம்பிற்கு கொரோனாவா?’ வெளியானது மருத்துவரின் அறிக்கை!