பொள்ளாச்சியை போன்று கொடைக்கானலிலும் போதை விருந்து – இளம்பெண்கள் உள்ளிட்ட 270 பேர் கைது

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் போதை விருந்தில் பங்கேற்ற, இளம்பெண்கள் உள்ளிட்ட 270 பேரை போலீசார் கைது செய்தனர்.

தமிழகத்தின் மிக முக்கியமான சுற்றுலா தளமான கொடைக்கானலுக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் சென்று வருகின்றனர். இங்கு சுற்றுலா செல்லும் கல்லூரி மாணவர்களை குறிவைத்து போதை பொருட்கள் விற்பனை நடைபெற்று வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு போதை காளான் சாப்பிட்ட கேரள மாணவர்கள் குறித்து, போலீசார் மேற்கொண்ட விசாரணைக்குப் பின்னர் அதன் விற்பனை குறைந்தது. மேலும், காவல் துறையினரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், கொடக்கானல் மேல்மலை கிராமமான கூக்கால் குண்டுப்பட்டியில் மது விருந்து நடப்பதாக தென்மண்டல ஐ.ஜிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. பின்னர் அவரது உத்தரவுப்படி விரைந்து சென்ற போலீசார் குறிப்பிட்ட இடத்தில் சோதனை நடத்தினர், அப்போது மது விருந்தில் பங்கேற்றிருந்த இளம்பெண்கள் உள்ளிட்ட 270பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து கல்லூரி மாணவர்கள் சமூக வலைதளங்கள் மூலம் ஒன்றிணைந்து மது விருந்தில் கலந்துகொண்டது தெரியவந்துள்ளது.

மேலும், பிடிபட்ட மாணவர்களிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், அவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு எச்சரித்து அனுப்பினர். இந்த விருந்துக்கு ஏற்பாடு செய்த ஒருங்கிணைப்பாளர்கள், உரிமையாளர்கள் ஆகியோரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோன்று கடந்த சில மாதங்களுக்கு முன்பு பொள்ளாச்சி பகுதியில் தனியார் தோட்டத்தில் நடைபெற்ற, மது விருந்தில் ஈடுபட்டதாக நூற்றுக்கணக்கான மாணவர்கள் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

What do you think?

பொது பாதுகாப்பு சட்டத்துக்கு ஸ்டாலின் கண்டனம்

ரயில்வேயில் 2 ஆம் வகுப்பு பயணிகளுக்கான கட்டணம் உயர்த்தப்பட்டது ஏன்? வைகோவின் கேள்விக்கு, மத்திய அமைச்சர் விளக்கம்