‘களத்திலேயே கெட்டவார்த்தையில் பேசிய கேப்டன் கோலி’ வைரலாகும் வீடியோ உள்ளே

நியூசிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் போது களத்திலேயே கேப்டன் கோலி கெட்டவார்த்தையில் பேசிய வீடியோ வைரலாக பரவி வருகிறது.

இந்தியா,நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நியூசிலாந்தில் நடைபெற்றது.முதல் போட்டியில் நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்றநிலையில் 2வது டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் வைத்து நடைபெற்றது.

இதில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 242 ரன்களும்,நியூசிலாந்து 235 ரன்களும் எடுத்தது.7 ரன்கள் முன்னிலையுடன் தனது இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய இந்திய அணி வெறும் 124 ரன்களில் ஆல் அவுட் ஆனது.

விராட் கோலி

இதையடுத்து 132 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து அணி 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 132 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. மேலும் தொடரையும் 2-0 என்ற கணக்கில் வென்று அசத்தியது.

இந்த தொடரில் இந்திய அணி அடைந்த படுதோல்விக்கு முக்கிய காரணம் பேட்ஸ்மேன்கள் தான் என்றும் கேப்டன் கோலி பொறுப்புடன் விளையாடவில்லை என்றும் ரசிகர்கள் பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் ஷமி பந்துவீச்சில் நியூசிலாந்து வீரர் டாம் லதாம் ஆட்டமிழந்தார். அப்போது கேப்டன் கோலி தன் விரலை வாயில் வைத்து F**K OFF என்று கெட்டவார்த்தையில் பேசினார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி ரசிகர்கள் பலரையும் வேதனை அடைய செய்துள்ளது.

What do you think?

‘அண்ணாத்த’ தீம் மியூசிக்: இமான் வெளியிட்ட தெறி வீடியோ

சமூகவலைத்தளங்களிலிருந்து வெளியேற நினைக்கும் பிரதமர் மோடி!