கொங்கில் கடுப்பான தலைவர்.. எடப்பாடிக்கு எதிராக சதி திட்டமா..? இப்படி பண்ணா அவர் அரசியல் வாழ்க்கையே..?
கொங்கு பகுதியில் அவர் தோல்வி அடைந்துவிட்டால் அவரின் அரசியல் எதிர்காலத்திற்கே பங்கம் ஆகி விடும்.., இதற்காகவாவது அதிமுகவும் பாஜகவும் இணைய வேண்டும்.. என அதிமுக எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார்..
அதிமுக – பாஜக மோதல் காரணமாக அவர்களின் கூட்டணி முறிந்துள்ளது.., 2024 லோக்சபா தேர்தலில் இவர்கள் கூட்டணி வைத்து கொண்டு போட்டியிட்டால் வெற்றி பெறலாம்.. 2026 சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியின்றி தனியாக நின்றாலே வெற்றி பெறுவோம் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்..
இதுகுறித்து கொங்கு மண்டல எம்.எல்.ஏ அளித்த பேட்டியில் அதிமுகவும் பாஜகவும் இணைய வேண்டுமென அனைவரும் நினைக்கிறோம்.. இதை தான் அதிமுகவின் மூத்த தலைவர்களும் நினைகிறார்கள்..
வருகிற லோக்சபா தேர்தலில் அதிமுக பாஜக தனிதனியாக நின்று போட்டியிட்டால் அது திமுகவிற்கு சாதகமாகிவிடும்.. நாங்கள் தனித்து போட்டியிட்டாலே திமுக ஜெயித்துவிடும்.., கடந்த தேர்தலில் திமுகவின் வெற்றிக்கு நாங்கள் பிரிந்தது மட்டும் தான் முக்கிய காரணம்..
இந்த முறை அப்படி நடக்காது அதிமுக – பாஜக இணையும்.., எங்களை பிரிக்க பலர் சதிதிட்டம் தீட்டி வருகின்றனர் மோடி வேண்டாம் என அதிமுக நினைக்கிறது.., மோடி வேண்டுமென பாஜக சொல்கிறது இந்த பிரச்சனை ஒரு முடிவிற்கு வந்த பிறகு சில தகவல்களை வெளியிடுவோம்.. என அதிமுக எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..