கோயம்பேடு மார்க்கெட் 22-ஆம் தேதி மூடப்படும்

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோயம்பேடு சந்தை வரும் ஞாயிற்றுக்கிழமை மூடப்படுவதாக அறிவி்க்கப்பட்டுள்ளது

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனது. வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் மூலம் நோய் பரவுவதால் அனைத்து விமான பயணிகளையும் முழுமையாக மருத்துவ பரிசோதனை செய்து அனுப்புகின்றனர்.

மக்கள் தங்களை தனிமைப்படுத்துவதன் மூலமே கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். 22-ந்தேதி யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று வேண்டுகொள் விடுத்துள்ளார். பால், உணவு, மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாது என்றும் அறிவித்திருந்தார். ஆனாலும் 22-ந்தேதி அனைத்து கடைகளையும் அடைக்க வியாபார நிறுவனங்கள் ஆலோசித்து வருகின்றன.

சென்னை மக்களுக்கு தேவையான காய்கறிகளை வழங்கி வரும் கோயம்பேடு மார்க்கெட் ஞாயிற்றுக்கிழமை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.அன்றைய தினம் மார்க்கெட் முழுவதும் முழுமையாக சுத்தம் செய்யப்படும் எனவும் பிளீச்சிங் பவுடர், கிருமி நாசினி தெளித்து மார்க்கெட்டை சுத்தம் செய்ய இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

What do you think?

‘திடீரென 2வது திருமணம் செய்துகொண்ட அமலாபால்’

சென்னையில் 118 விமானங்கள் ரத்து!