கிருஷ்ண ஜெயந்தி விரதம் இருக்க வேண்டிய முறை..!! எந்த நட்ச்சத்திர காரர்களுக்கு இன்றைய நாள் சிறப்பு..?
“கிருஷ்ணர் என்பவர் மகா விஷ்ணுவின் எட்டாவது அவதாரம்., யசோதா தாய்க்கு 8வது மகனாக பிறந்து கோகுலத்தில் வளந்தவர் தான் கிருஷ்ணர்..”
இன்று கிருஷ்ண ஜெயந்தி இந்தியா முழுவதும் கொண்டாடப்படவுள்ளது. சந்தோசம் என்பது வெளியில் இல்லை. நம் மனதில் இருப்பது என்பதை உலகிற்கு உணர்த்தியவர் கிருஷ்ணர்”. அதே சமயம் நாம் என்னவாக இருக்கிறோமோ அதை அப்படியே நமக்கு காட்சி கொடுப்பவர் தான் கிருஷ்ணர்.
கிருஷ்ணர் பிறந்த இந்த நாளை தான் நாம் “கிருஷ்ண ஜெயந்தி” என கொண்டாடி வருகிறோம்.. இன்றைய நாளில் கிருஷ்ணருக்கு பிடித்த உணவுப் பொருட்களை படைத்தும், கிருஷ்ணரின் சிலைகளை நன்றாக அலங்கரித்து., பச்சரிசி மாவில் காலடி பாதம் போட்டு கிருஷ்ணரை தங்களது இல்லங்களில் அழைத்து வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு கிருஷ்ணர் வேடம் அணிந்து கொண்டாடுவோம்..
அப்படி செய்தால் கிருஷ்ணர் நம் வீட்டிற்கு வருவதாக நினைத்து கொண்டாடுவார்கள்., கிருஷ்ண ஜெயந்தியை ஜென்மாஷ்டமி கோகுல அஷ்டமி அல்லது ஜன்மாஷ்டமி என்றும் அழைக்கப்படுகிறது.
ஆகஸ்ட் 26ம் தேதியன இன்று ஜென்மாஷ்டமி கொண்டாடப்படுகிறது . சாஸ்திரங்களின் படி, பகவான் கிருஷ்ணர் பாத்ரபாத கிருஷ்ணபக்ஷ அஷ்டமி திதியில் நள்ளிரவு 12 மணியளவில் (நள்ளிரவு) ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தார். பக்தர்கள் ஜென்மாஷ்டமி அன்று விரதம் இருந்து நள்ளிரவில் கிருஷ்ணரை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள் பற்றி படிக்கலாம்..
இன்று விரதம் நள்ளிரவு ௧௨ மணிக்கு மேல் கிருஷ்ணருக்கு தீப ஆராதனை காண்பித்த பின்னரே பால் மற்றும் பலம் சாப்பிட வேண்டும்.. அது கிருஷ்ணர் பிறந்த நேரம் என்பதால் அந்த நேரத்தில் அவரை வழிபட்டால் கூடுதல் பலன்கள் கிடைக்கும்..
அதன் பின் மறுநாள் சூரிய உதயத்திற்குப் பிறகு நோன்பு திறக்கும் பலர் உள்ளனர். ஜென்மாஷ்டமி நாளில் சூரிய உதயத்திற்கு முன் எழுந்து குளித்து விரதம் கடைப்பிடிக்க வேண்டும். நாள் முழுவதும், ராதா கிருஷ்ணரின் நாமங்களை உச்சரித்துக்கொண்டே இருக்க வேண்டும்.
நட்சத்திரம் படி கோகுலாஷ்டமி விரதம் :
அஷ்டமி திதி ஆரம்பம் ஆகும் நேரம் இன்று அதிகாலை 03:39 மணி
அஷ்டமி திதி முடிவடையும் நேரம் ஆகஸ்ட் 27 காலை 02:19 மணிக்கு
ரோகிணி நட்சத்திரம் ஆரம்பம் ஆகும் நேரம் இன்று பிற்பகல் 03:55 மணி
ரோகிணி நட்சத்திரம் முடிவடையும் நேரம் மறுநாள் (ஆகஸ்ட் 27) பிற்பகல் 03:38 மணி
சந்திர உதயம் இன்று இரவு 11:07 மணிக்கு
நிஷிதா பூஜை செய்யும் நேரம் இரவு 11:26 மணி முதல் மறுநாள் (ஆகஸ்ட் 27ம் தேதி)
அதிகாலை 12:11 மணி வரை
பரணி நட்சத்திரம் ஆகஸ்ட் 27ம் தேதி பிற்பகல் 03:38 மணிக்கு.. தொடங்கி அன்று மாலை 6:30 மணிக்கு முடிகிறது..
ஜென்மாஷ்டமி விரதம் இருபவர்கள் பிரம்மச்சரியத்தை கடைபிடிக்க வேண்டும்.
விரதம் இருக்கும் நேரத்தில் பழங்களைத் தவிர வேறு எந்த உணவையும் உட்கொள்ளக் கூடாது.
இரவு 12 மணிக்குப் பிறகு அல்லது மறுநாள் சூரிய உதயத்திற்குப் பிறகு விரதம் முடிக்கலாம்
கிருஷ்ண ஜென்மாஷ்டமி நாளில், பக்தர்கள் கிருஷ்ணரின் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்யலாம்.
கிருஷ்ணருக்கு பிரசாதம் அளித்த பிறகு, நாம் சாப்பிட வேண்டும்..
நீங்கள் விரதத்தைக் கடைப்பிடிப்பவராக இருந்தால், பகலில் தூங்காமல் இருக்க வேண்டும்.
உங்கள் கோபத்தை மறந்து யாரிடம் தவறான வார்த்தைகளை பேசக்கூடாது..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..