சிலிண்டருக்கு மாலை அணிவித்து காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணகிரியில் சிலிண்டருக்கு மாலை அணிவித்து கண்ணீர் அஞ்சலி செலுத்தி காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

சமையல் எரிவாயு விலை கிடு கிடு உயர்வை கண்டித்து நாடு முழுவதும் மத்திய அரசுக்கு எதிரான கண்டன போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அண்ணா சிலை எதிரே காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

அப்போது சிலிண்டருக்கு மாலை அணிவித்து கண்ணீர் அஞ்சலி செலுத்தி காங்கிரஸ் கட்சியினர் தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத் தலைவர் சுப்ரமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

What do you think?

“விவசாயிகளுக்கு கடன் இல்லை என்ற நிலை வராது” – செல்லூர் ராஜூ உறுதி

கிருஷ்ணகிரியில் களை கட்டிய எருது விடும் போட்டி