கிருஷ்ணகிரி பாலியல் வன்கொடுமை சம்பவம்.. சிறப்புக் குழுவின் நடவடிக்கை என்ன?
கிருஷ்ணகிரி மாவட்டம் பருதூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில், போலியான முறையில் என்.சி.சி முகாம் ஒன்று நடத்தப்பட்டது. இந்த முகாமில் கலந்துக் கொண்ட 13 மாணவிகளுக்கு, பாலியல் வன்கொடுமை கொடுக்கப்பட்டது.
மேலும், 12 வயது சிறுமியும் இந்த போலி முகாமால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சிறப்பு புலணாய்வு குழுவை உருவாக்கி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.
இந்த குழுவானது, இன்று அந்த மாவட்டத்திற்கு சென்று, இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து, ஆலோசனை நடத்தி வருகிறது. மேலும், சம்பவ நடந்த இடத்தையும், அவர்கள் பார்வையிட உள்ளனர்.
-பவானி கார்த்திக்