கிருஷ்ணகிரி பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை..!! முதலமைச்சர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு..!!
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செயல்படும் பர்கூர் என்ற தனியார் பள்ளியில், கடந்த 5ம் தேதி முதல் 9ம் தேதி வரை நடைப்பெற்ற என்சிசி முகாமில் அப்பள்ளியை சேர்ந்த 17 மாணவிகள் கலந்து கொண்டனர். முகாமில் பங்கேற்ற 8ம் வகுப்பு படித்து வரும் 13 வயது மாணவியை பயிற்சியாளரும், நாம் தமிழர் கட்சி நிர்வாகியுமான சிவராமன் (35) பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
மேலும் 13 மாணவிகள் பாலியல் சீண்டலுக்கு உள்ளாகியுள்ளனர். இதுகுறித்து பயிற்சியாளர் சிவராமன் உள்பட 11 பேரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். சிவராமன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்ததும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.. இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது..
இதுகுறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தனது எக்ஸ் வலைத்தளம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.., “கிருஷ்ணகிரி மாவட்டம், கந்திக்குப்பத்தில் தனியார் பள்ளி பயிற்சி முகாமில் பள்ளி மாணவிகள் சிலர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான சம்பவத்தில் குற்றவாளிகள் உடனடியாக கைது – இது குறித்த விசாரணையை துரிதமாக மேற்கொண்டு, 15 நாட்களுக்குள் அனைத்து நடவடிக்கைகளையும் முடிக்க வேண்டும் என்றும், காவல்துறை தலைவர் அவர்களின் தலைமையில், சிறப்பு புலனாய்வு குழு அமைத்திடவும், சமூக நலத்துறை செயலாளர் அவர்களின் தலைமையில் பல்நோக்கு குழு அமைத்திட முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..