சின்ன காட்டேரி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்..!! ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்..!
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த கெங்காபுரம் கிராமத்தில் உள்ள அருள்மிகு சின்ன காட்டேரி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் தொடங்கியது.., கெங்காபுரம் கிராமத்தில், காவல் தெய்வமாகவும், குல தெய்வமாகவும் மற்றும் இஷ்ட தேவதையாக இருக்கும் சின்ன காட்டேரி அம்மன் கோவில் புதுப்பிக்கப்பட்டு, இன்று மகா கும்பாபிஷேகம் நடைப்பெற்றது.
கும்பாபிஷேகம் தொடங்குவதற்கு முன்னதாக கோவில் வளாகத்தில் யாகசாலை அ
மைக்கப்பட்டு பல்வேறு சிறப்பு யாகம், மற்றும் பூஜைகள் செய்யப்பட்டன, சிறப்பு பூஜைகளை தொடர்ந்து, யாகசாலையிலிருந்து மேளதாளம் முழங்க பக்தர்கள் கலசங்கள் எடுத்து வீதி உலா வந்து கோபுரத்தின் மேல் ஏறி புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் செய்து வழிபட்டனர். கும்பாபிஷேகம் நடைபெற்றதை தொடர்ந்து, காப்பு கட்டிய பக்தர்கள் மற்றும் கிராம மக்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது.
இந்த கும்பாபிஷேக விழாவில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் ஒரு சில பக்தர்கள் காப்பு கட்டி நேர்த்திக் கடன் செலுத்தினர்.