பழனியில் கும்பகலச பூஜை ; ஆனந்தத்தில் ஆனந்த விநாயகர்
வைகாசி மாதம் பிறந்ததும் பழனியில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. இன்று காலை பழனி மலையில் உள்ள ஆனந்த விநாயகருக்குகும்ப கலசம் வைத்து கணபதி ஹோமம் நடைபெற்றுள்ளது.
அபிஷேகம் முடிந்ததும் , வெள்ளிக் கவசங்கள் வைத்து அலங்காரம் செய்து தீப ஆராதனை நடத்தியுள்ளனர். மேலும் திருஆவினன்குடி பெரிய நாயகி அம்மன் கோவிலிலும், லட்சுமி பெருமாள் கோவிலிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றுள்ளது.
இதில் கலந்துக் கொண்ட அனைத்து பக்தர்களும் மலைக் கோயிலை சுற்றி கிரிவலம் வந்துள்ளனர்.
-வெ.லோகேஸ்வரி