பாஜகவில் இருந்து விலகிய குஷ்பு..!! தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய காரணம்..?
பிரபல நடிகையும் பஜாக தேசிய மகளிர் அணியின் உறுப்பினருமான “குஷ்பு” மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர். இவர் சினிமாவில் நடித்த காலங்களில் குஷ்புவிற்காக கோவையில் ரசிகர்கள் கோவிலே கட்டினார்கள் என சொல்லலாம்.. தமிழ்நாடு ரசிகர்கள் மத்தியில் குஷ்பூ மீது ரசிகர்கள் வைத்திருந்த அன்பின் அடையாளமே அந்த கோவில் என சொல்லலாம். இதனால் சினிமாவை தொடர்ந்து அரசியலிலும் கால் பதித்தார் குஷ்பு.
கடந்த 2010ம் ஆண்டு திமுகவில் இருந்த குஷ்பு 2014ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அதன் பின்னர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய குஷ்பு, 2020 ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்தார். 2021-ம் ஆண்டு நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு, 2 லட்சத்து 50 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்..
குஷ்பு பெற்ற வாக்குகள் வெறும் 24ஆயிரத்திற்கும் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது, இருப்பினும் குஷ்பூவிற்கு பாஜகவில் தேசிய செயற்குழு உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது. அதை தொடர்ந்து, கடந்த 2023ம் ஆண்டு பிப்ரவரி மாதம், குஷ்பு தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டார்.
அப்போது பேசிய குஷ்பு, நான் எப்போதும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்காக குரல் கொடுத்து வருகிறேன். பெண்களின் உரிமைகளுக்கும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறேன். பெண்களின் சுயமரியாதைக்காக தொடர்ந்து போராடி வருகிறேன். பெண்களுக்கு எதிரான கொடுமைகளுக்கு குரல் கொடுக்க தற்போது எனக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. பெண்கள் பயமின்றி, தங்களுக்கு நேரும் பாதிப்புகளைக் கூற வேண்டும். உங்களுக்கு குரல் கொடுக்க நான் இருக்கிறேன். எப்போது வேண்டுமானாலும் என்னைத் தொடர்பு கொள்ளலாம் என்று கூறியிருந்தார்.
எனினும் அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்கி வந்தார் குஷ்பு. மணிப்பூரில் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக குஷ்பு குரல் கொடுக்கவில்லை என எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்தனர். பட்டியலின மக்களை அவமதிக்கும் வகையில் குஷ்பு பேசியதாகவும் சர்ச்சைகள் எழத்தொடங்கியது. இந்நிலையில், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியை குஷ்பு திடீரென ராஜினாமா செய்துள்ளார்.
கடந்த 2023ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 28ம் தேதி தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக பொறுப்பேற்ற குஷ்பு, ஒன்றரை ஆண்டுகளில் தனது பதவியை ராஜினாமா செய்து அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசுபொருள் ஆகியுள்ளது..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..