கொட்டாரக்கராவில் உள்ள தாலுக்கா மருத்துவமனையில் 22 வயதான பெண் மருத்துவர் ஒருவரை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட குற்றவாளி கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் குடவத்தூர் ஸ்ரீநிலையத்தில் உள்ள பிரதிவாதி நெடும்பனை பள்ளியில் ஆசிரியராக இருப்பவர் எஸ். சந்தீப், இவர் அக்கம் பக்கத்தினருடன் சண்டை போட்டதால் படுகாயம் அடைந்தார். இதுகுறித்த தகவலறிந்து வந்த போலீசார் சந்தீப்பை கைது செய்து, கொட்டாராக்காவில் உள்ள தாலுக்கா மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.
அங்கிருந்த பெண் மருத்துவர் சந்தீப்பின் காலில் இருந்த காயத்திற்கு சிகிச்சை மேற்கொண்டிருந்த போது, திடீரென ஆத்திரமடைந்த அவர் கத்திரிக்கோல் மற்றும் ஸ்கால்பெல் மூலம் அங்கிருந்தவர்களை தாக்க ஆரம்பித்துள்ளார். இதில் படுகாயம் அடைந்த இளம் பெண் மருத்துவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கொட்டாரக்கராவில் மருத்துவ நிபுணர்கள் வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.