நில மோசடி வழக்கு…! ஹேமந்த் சோரனுக்கு ஹைகோர்ட் உத்தரவு..?
நில மோசடி, சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் ஜார்க்கண்ட் மாநில முதல்வராக இருந்த ஹேமந்த் சோரனுக்கு முதலில் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகும் படி உத்தரவிட்டு 10 முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருந்தது.
ஆனால் ஹேமந்த் சோரன் விசாரணைக்கு ஆஜராகாமல் திடீரென தலைமறைவாகியுள்ளார். அவருக்காக டெல்லி பங்களாவில் 30 மணிநேரம் அமலாக்கத்துறை அதிகாரிகள் காத்திருந்தனர். அங்கு நடத்தப்பட்ட சோதனையில் 36 லட்சம்ரூபாய் ரொக்கப் பணமும் கைப்பற்றப் பட்டது.
அதனைத் தொடர்ந்து ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சிக்கு திரும்பிய ஹேமந்த் சோரன் கடந்த ஜனவரி மாதம் 31-ந் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். 6 மணிநேர விசாரணைக்குப் பின்னர் ஹேமந்த் சோரனை கைது செய்தது அமலாக்கத்துறை. இதனால் முதல்வர் பதவியை ஹேமந்த் சோரன் ராஜினாமா செய்தார். அவருக்குப் பதில் சாம்பாய் சோரன், ஜார்க்கண்ட் முதல்வராக பதவியேற்றார்.
ஜார்க்கண்ட் மாநிலம் பிர்ஸா முண்டா சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஹேமந்த் சோரன், இந்த வழக்கில் தமக்கு ஜாமீன் கோரி ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு மீது இன்று விசாரணை நடைபெற்றது. ஹேமந்த் சோரன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அருணாப் சவுத்ரி, முதல் கட்ட தகவலின் படி நில மோசடி வழக்கில் ஹேமந்த் சோரன் குற்றவாளி இல்லை. ஜாமீனில் விடுதலையானாலும் குற்றம் செய்யவும் வாய்ப்பில்லை என்றார். இந்த வாதத்தை ஏற்று ஹேமந்த் சோரனுக்கு ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கியது.
இதையும் படிங்க :
நீட் விலக்கு தீர்மானம்..! சட்டபேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின்..!
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..