நிலமோசடி விவகாரம்..!! தமிழ்நாடு அரசு அதிரடி..!!
தமிழகத்தில் நிலமோசடி பிரச்சனையானது அதிகரித்து இருப்பதாக ஒரு புள்ளிவிவரம் சொல்லுகிறது.. அதனை தடுக்கும் விதமாக தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.
மேலும் நிலம் சம்பந்தமான விவகாரங்களில் வெளிப்படை தன்மையை ஏற்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது…
இந்த திட்டத்தின் மூலம் எந்த நேரத்திலும் இணையதள சேவைகள் மூலம் இதனை விண்ணபிப்பது மட்டுமின்றி அதனை பற்றி தெரிந்துகொள்ளவும் முடியும்..
https://eservices.tn.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம் தெரிந்துக்கொள்ளும் படி வழிவகை செய்துள்ளது..
மேலும் இதில் பட்டா மாறுதல், பட்டா-சிட்டா விவரங்கள், அ-பதிவேடு விவரங்கள், அரசு புறம்போக்கு நிலம், புலப்பட விவரங்கள், நகர நில அளவை வரைபடம் குறித்த அனைத்து விவரங்களும் இதன் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
இதனால் நாம் வாங்கும் நிலம் பற்றிய விவரங்களை பதிவேற்றம் செய்யும் போது நிலத்தின் உரிமையாளர் யார்..? நிலத்தின் அளவு என்ன., இந்த நிலமானது தரமான நிலமா அல்லது தரமற்ற நிலமா என அனைத்து விவரங்களும் இதன் மூலம் தெரிந்துக்கொள்ள முடியும்..
இந்த திட்டமானது தாலுக்காவில் மட்டுமின்றி கிராமங்களிலும் இத்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.