‘நியூசி.க்கு எதிரான தொடரில் படுதோல்வி’ ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்தியாவின் நிலை என்ன தெரியுமா?

நியூசிலாந்து அணிக்கு எதிராக அந்நாட்டில் நடைபெற்ற 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் படுதோல்வி அடைந்தது. இவ்விரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடர் முடிவடைந்த நிலையில் ஐசிசி புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.

தொடர் தோல்விகளுக்கு பிறகும் டெஸ்ட் தரவரிசை பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது இந்திய அணி. ஆனால் இந்த தொடரில் அடைந்த தோல்வியின் காரணமாக 4 புள்ளிகளை இழந்து தற்போது 116 புள்ளிகளுடன் முதலிடத்தை தக்கவைத்துள்ளது இந்தியா.

நம்பர் 1 அணியாக இருக்கும் இந்தியாவை வீழ்த்தியதன் மூலம் 5 புள்ளிகள் கூடுதலாக பெற்று 4-வது இடத்தில் இருந்த நியூசிலாந்து அணி தற்போது தரவரிசையில் 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இதனால் ஆஸ்திரேலியா 108 புள்ளி, இங்கிலாந்து அணி 105 புள்ளிகளுடன் 3-வது இடத்திற்கும் தள்ளப்பட்டுள்ளது.

இதற்கு அடுத்த 5, 6, 7 மற்றும் 8 ஆகிய இடங்களில் முறையே தென்ஆப்பிரிக்கா (98), இலங்கை (91), பாகிஸ்தான் (85) மற்றும் மேற்கிந்திய தீவுகள் (81) ஆகியவை உள்ளன.

What do you think?

இன்று முதல் தொடங்குகிறது 11ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு!

‘தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,024 உயர்வு’ பொதுமக்கள் அதிர்ச்சி!