“லட்டு பாவங்கள் வீடியோ..” அவமதிக்கப்பட்ட இந்துக்கள் பாஜக புகார்…!!
பரிதாபங்கள் சேனல் வெளியிட்டு இருந்த.. “லட்டு பாவங்கள்” என்ற வீடியோவை இணையத்தில் இருந்து நீக்கியிருந்தாலும், இந்துக்களின் உணர்வுகளை அவமதித்துள்ளதாக, கூறி ஆந்திரப்பிரதேச டிஜிபியிடம் தமிழ்நாடு பாஜகவினர் புகார் அளித்துள்ளனர்..
தற்போது நாடு முழுவதும் பரபரப்பாக பேசபட்டு வரும் ஒரு விஷயம்., திருப்பதி லட்டுவில் விலங்குகள் எண்ணெய் கலக்கப்பட்டிருப்பது குறித்து பல்வேறு சர்ச்சைக்கள் எழுந்தது.. புனித திருத்தலங்களில் ஒன்றாக கருதப்படும் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரசாதமாக வழங்கப்பட்டு வரும் லட்டுவில் உபயோகப்படுத்தபடும் நெய்யில்., மாட்டு கொழுப்பு., பன்றி கொழுப்பு மற்றும் மீன் எண்ணெய் கலந்த நெய்யை உபயோகபடுத்தி இருப்பதாக பெரும் சர்ச்சை கிளம்பியது.. விலங்கு கொழுப்புகள் பயன்படுத்தியதால்., தோஷங்கள் நீக்கி பரிகார பூஜை செய்வதற்காக வேலைகள் நடந்து கொண்டிருந்தாலும் இந்த சர்ச்சைகான ஒரு முடிவு இன்னும் கிடைக்கவில்லை என சொல்லலாம்
இந்த விவகாரம் வெளியானதை தொடர்ந்து சமூக வலைதளங்களில் மீம்ஸ்கள்., மற்றும் யூடியுப் சேனல்கள் இதுகுறித்து வீடியோவாக வெளியிட்டனர்., அந்த வகையில் பிரபல யூடியுப் சேனல்களில் ஒன்றான “பரிதாபங்கள்” சேனல் வெளியிட்ட வீடியோவிற்கு மட்டும் சர்ச்சை எழுந்திருப்பது குறிப்பிடத்தக்கது..
அதாவது “லட்டு பாவங்கள்” என்ற ஒரு வீடியோவை நேற்று முன்தினம் தங்களுடைய வழக்கமான காமெடி பாணியில் நையாண்டி செய்து அவர்களது யூடியூப் சேனலில் பதிவிட்டுள்ளனர். இணையத்தில் பதிவிடப்பட்ட சில மணி நேரத்திலயே அந்த வீடியோவானது பல லட்சம் பார்வையாளர்களை கடந்துள்ளது.
வீடியோ பதிவான இரண்டு மணி நேரத்திலயே சில காட்சிகள் நீக்கப்பட்டுள்ளது. அதாவது பிராமிணர்களை கலாய்த்தும்., பிரசாதம் குறித்து இப்படி வீடியோ பதிவிடலாமா என பலரும் கேள்வி எழுப்பி., சிலர் கண்டனங்களை தெரிவித்ததை தொடர்ந்து குறிப்பிட்ட சில காட்சிகளை நீக்கியுள்ளது., மேலும் நீக்கப்பட்டதற்கான காரணம் குறித்து நேற்று தனது இன்ஸ்கிராம் பக்கத்தில் பரிதாபங்கள் சேனல் விளக்கம் அளித்திருந்தது…
அதில் அவர்கள் குறிபிட்டிருப்பதாவது “கடைசியாக பரிதாபங்கள் சேனலில் வெளிவந்த வீடியோ முழுக்க நகைச்சுவைக்காக உருவாக்கப்பட்டது. யார் மனதையும் புண்படுத்தும் நோக்கில் உருவாக்கப்படவில்லை அதையும் மீறி சிலர் மனம் புண்பட்டிருப்பதால் அதற்கு வருத்தம் தெரிவித்து சம்பந்தப்பட்ட காணொலியை நீக்கி உள்ளோம் இது போல் வருங்காலங்களில் நடைபெறாது என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம்” என இவ்வாறே பதிவிட்டிருந்தனர்..
இந்நிலையில் தமிழ்நாடு பாஜக விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுப் பிரிவின் மாநிலத் தலைவர் “அமர் பிரசாத் ரெட்டி” ஆந்திரா போலீசில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.. அந்த புகாரில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது. யூடியுப்பில் இருந்து வீடியோ நீக்கப்படிருந்தாலும் அவை இந்துக்களின் உணர்வுகளை அவமதிக்கும் வகையில் அமைந்ததாக பாஜக சார்பில் புகார் அளித்துள்ளனர்…
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் வலைத்தளம் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது “லட்டு பாவங்கள்” என்ற தலைப்பிலான அவதூறு வீடியோவிற்கு, பரிதாபங்கள் யூடியூப் சேனலுக்கு எதிராக எஃப்ஐஆர் பதிவு செய்யக் கோரி, ஆந்திரப் பிரதேச டிஜிபியிடம் முறையான புகார் ஒன்றைச் சமர்ப்பித்துள்ளேன். அவர்கள் வீடியோவை நீக்கியிருந்தாலும், வீடியோ இந்துக்களின் உணர்வுகளை அவமதிப்பது மட்டுமல்லாமல், சமூகங்களுக்கு இடையே பகையை வளர்க்கவும், சட்டம் – ஒழுங்கு பிரச்சினைகளைத் தூண்டும் விதமாகவும் உள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..