அரவிந்த் கெஜ்ரிவால் 3.O – தலைவர்கள் வாழ்த்து

தொடர்ந்து 3வது முறையாக டெல்லியின் முதலமைச்சராக பொறுபேற்கும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், டெல்லியில் 3-வது முறையாக பொறுப்பேற்கும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும், ஆம் ஆத்மிக்கும் வாழ்த்துகள் எனக் கூறியுள்ளார். வகுப்புவாத அரசியலை வளர்ச்சித் திட்டங்கள் மூலம் வெல்ல முடியும் என டெல்லி தேர்தல் நிரூபித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். வெறுப்பு அரசியலுக்கு சரியான பதிலடியை டெல்லி மக்கள் கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ள கனிமொழி, முதலமைச்சராக பொறுபேற்க உள்ள அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வாழ்த்துக்கள் எனக் கூறியுள்ளார்.

டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் பெற்றுள்ள வெற்றி ஜனநாயகத்துக்கான வெற்றி என மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார். கெஜ்ரிவாலுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, நாடு மன் கீ பாத் வழியில் செல்லாமல் ஜன் கீ பாத் வழியில் செல்வதாக தெரிவித்துள்ளார். கெஜ்ரிவாலை தீவிரவாதி என அழைத்தும் பா.ஜ.கவால் அவரை தோற்கடிக்க முடியவில்லை என உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.

துப்பாக்கியால் சுடச்சொன்னவர்களை டெல்லி மக்கள் துடைப்பத்தால் அடித்துள்ளதாக நடிகர் பிரகாஷ் ராஜ் பா.ஜ.கவின் தோல்வியை விமர்சித்துள்ளார். பாரதிய ஜனதாவையும், மதவாத அரசியலையும் மக்கள் வெறுப்பதை டெல்லி முடிவுகள் காட்டுவதாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த டி. ராஜா கூறியுள்ளார். டெல்லியின் ஆன்மா காப்பாற்றப்பட்டுள்ளதற்கு நன்றி என, ஆம் ஆத்மிக்கு தேர்தல் ஆலோசகராக செயல்பட்ட பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார். இதேபோல் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி, மக்கள் நீதிமய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் ஆகியோரும் கெஜ்ரிவாலுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

What do you think?

அசுர பலத்துடன் டெல்லியில் மீண்டும் ஆட்சி அமைக்கிறது ஆம்ஆத்மி

சம்பிரதாயங்களை மீறிய மஹிந்த ராஜபக்ச!!! – கண்டுகொள்ளாத தேவஸ்தான அதிகாரிகள்