கசிந்த வினாத்தாள்.. விரைவான நடவடிக்கை எடுத்த தமிழ்நாடு உயர்கல்வித்துறை..!
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் நடத்தக்கூடிய பி.எட் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் கடந்த ஆகஸ்ட் 27 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில் இளங்கலை கல்வியியல் படிக்கும் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு, ‘Creating an inclusive School’ என்ற பாடப்பிரிவு உள்ளது. இந்த படத்திற்கான செமஸ்டர் தேர்வு காலை 10 மணிக்கு நடக்க இருந்தது. ஆனால், தேர்வு தொடங்குதவற்கு முன்பாகவே, வினாத்தாள் நேற்று இரவே கசிந்துள்ளது.
இதனை கண்டறிந்த உயர்கல்வித்துறை, அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அந்த அறிக்கையில், ஏற்கனவே வழங்கப்பட்ட வினாத்தாளை பயன்படுத்த வேண்டாம் என்றும், புதிய வினாத்தாள், 9.15 மணிக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் கூறப்பட்டது.
இதையடுத்து, அனுப்பி வைக்கப்பட்ட புதிய வினாத்தாளை வைத்து, வெற்றிகரமாக தேர்வு நடத்தப்பட்டது. மேலும், இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-பவானி கார்த்திக்