கடந்த சில வாரங்களாக “துபாய் எக்ஸ்போ 2020″ நிகழ்ச்சி துபாயில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் நேற்று முன்தினம் (மார்ச்.05) இரவு இளையராஜாவின் இசைக் கச்சேரி மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு பிறகு, துபாயில் உள்ள ஏ.ஆர்.ரகுமானின் பிரம்மாண்டமான ஃபிர்தோஸ் ஸ்டூடியோவுக்கு இளையராஜா சர்ப்ரைஸ் விசிட் செய்தார். அங்கு அவரை ஏ.ஆர். ரஹ்மான் வரவேற்று ஸ்டூடியோவை சுற்றிக் காண்பித்தார்.
பின்னர், இளையராஜாவுடன் எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏ.ஆர். ரஹ்மான் பகிர்ந்து,”மேஸ்ட்ரோவை எங்களின் ஃபிர்தோஸ் ஸ்டூடியோவுக்கு வரவேற்பது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது. எங்கள் ஸ்டூடியோவுக்காக அவர் ஏதேனும் இசை அமைப்பார் என நம்புகிறேன்” என பதிவிட்டுள்ளார்.
இதனை, தனது ட்விட்டர் பக்கத்தில் ரீட்வீட் செய்துள்ள இளையராஜா, “உங்கள் கோரிக்கை ஏற்கப்பட்டது. விரைவில் இசைப் பயணத்தைத் தொடரலாம்” என்று பதிவிட்டுள்ளார்.