இந்தியா ஆழ்கடலில் மனிதர்களை அனுப்புவதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் வரும் 2026ம் ஆண்டு சமுத்ராயன் திட்டம் நிறைவடையும் என்று அறிவியல் தொழிநுட்பத்துறை தெரிவித்துள்ளது.
உலக நாடுகள் விண்வெளில் காட்டும் ஆராய்வதை விட பூமியில் இருக்கும் கடலின் மீது இருக்கும் ஆர்வம் மிக குறைவு. இன்றைய தொழில்நுட்ப உலகத்திலும் கடலில் உள்ள அணைத்து இடங்களுக்கும் மனிதனால் செல்ல இயல முடியாது என்பது உண்மை. இதற்கு அறிவியலாளர்களுக்கு கடல் மீதான குறைந்த ஆர்வமே காரணம் என்று அவ்வப்போது பேச்சுகள் வெளிவரும். இந்நிலையில் இந்திய அரசு சமுத்ராயன் திட்டம் என்ற ஆழ்கடலில் மனிதனை அனுப்பும் திட்டத்தில் நீண்ட நாட்களாக ஈடுபட்டு வருகிறது. தற்போது அது தொடர்பான தகவலை வெளியிட்டுள்ளது.
சமுத்ராயன் திட்டம் என்பது கடலின் ஆழத்தையும் அதை குறித்தான ஆய்வுகளுக்கும் உதவும் திட்டமாக கொண்டுவரப்பட்டது. இதில் இந்தியா உட்பட ஆறு நாடுகளை கொண்டுள்ளது. இந்நிலையில் இது குறித்தான அறிவிப்பில், 6000 மீட்டர் ஆழ்கடலுக்குள் மனிதனை அனுப்பும் சமுத்ராயன் திட்டம் வருகிற 2026ம் ஆண்டு முழுவதுமாக நிறைவடையும் என்றும் தற்போது ஆழ்கடல் ஆய்விற்காக வாகனங்கள் சோதனை செய்யப்பட்டு வருவதாகவும் இந்திய அறிவியல் தொழிநுட்பத்துறை தெரிவித்துள்ளது.