மாநில கல்வி உரிமையை மீட்போம்..! முதலமைச்சர் ஸ்டாலின் அதிரடி..!!
மாநில கல்வி உரிமையை மீட்கும் பணியில் சட்டப்போராட்டமும் அரசியல் போராட்டங்களும் தொடரும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டத்தில் கள ஆய்வு மேற்கொள்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்றுள்ளார். அங்கு முன்னாள் மத்திய நிதிமந்திரி ப.சிதம்பரத்தின் ஏற்பாட்டில் காரைக்குடி அழகப்பா பல்கலை கலையரங்க வளாகத்தில் 12 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட வளர் தமிழ் நூலகத்தையும், நுழைவு வாயிலில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையையும் திறந்து வைத்தார்.
அதன் பின்னர் மேடையில் பேசிய அவர், திருவள்ளுவர் மற்றும் வள்ளலாரை களவாட ஒரு கூட்டமே முயற்சி செய்து வருவதாக விமர்சித்தார். மேலும் நூலகங்களை அதிகளவில் உருவாக்க வேண்டும் என்றும் வளர் தமிழ் நூலகத்துக்கு 1000 புத்தகங்களை அனுப்பி வைக்க உள்ளதாகவும் அறிவித்தார். அதனை தொடர்ந்து பேசிய அவர், நான் முதல்வன் திட்டம் மூலம் 22.56 லட்சம் மாணவர்களுக்கு திறன் பயிற்சி பெற்றுள்ளதாகவும், புதுமைப் பெண் திட்டத்தால் கல்லூரிகளில் சேரும் மாணவிகளின் எண்ணிக்கை 34 சதவீதம் அதிகரித்துள்ளதாக பெருமிதம் தெரிவித்தார். மேலும் மாநில கல்வி உரிமையை மீட்கும் பணியில் சட்டப்போராட்டமும் அரசியல் போராட்டங்களும் தொடரும் என்று தெரிவித்துள்ளார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..