ADVERTISEMENT
சுவையான அவல் பால் கீர்…!!!
உடலுக்கு ஆரோக்கியமான அவலில் நார்ச்சத்து, கார்போஹைட்ரேட், இரும்புச் சத்து, ஆக்சிஜனேற்றிகள் ஆகியவற்றை அடக்கி இருக்கிறது.
நாவிற்கு ருசியான அவல் பால் கீர் தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாமா?
தேவையான பொருட்கள்:
அவல்- ஒரு கப்
பால்- 3 கப்
வெல்லம்- 1/2 கப்
நெய்- 1 ஸ்பூன்
முந்திரி- 10
உலர் திராட்சை- 2 ஸ்பூன்
கன்டென்ஸ்டு மில்க்- 1/4 கப்
ஏலக்காய் தூள்- கால் டீஸ்பூன்
செய்முறை:
கொஞ்சம் முந்திரியை எடுத்து ஊற வைத்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் நெய் சேர்த்து, அதில் முந்திரி, உலர் திராட்சை ஆகியவற்றை சேர்த்து வறுத்து எடுத்து தனியாக வைத்து கொள்ளவும்.
அவலை நெய்யில் சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.
அடுத்தது ஒரு பாத்திரத்தில் பால் ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்க விட வேண்டும். அதில் வறுத்து எடுத்து வைத்துள்ள அவலை சேர்த்து வேகவைக்க வேண்டும்.
அரைத்த முந்திரியை எடுத்து ஊற்றி கொதிக்க விடவும். தொடர்ந்து அதில் கன்டென்ஸ்டு மில்க் சேர்கவும்.
பிறகு கீர் நன்கு கெட்டியாகி கிடைக்கும். பாகு காய்ச்சிய வெல்லத்தை சேர்த்து கொதிக்க விடவும்.
பின்னர் ஏலக்காய்தூள் சேர்த்து இறக்கவும்.
இப்போ ருசியான அவல் பால் கீர் தயார். அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.