காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினரான ராகுல் காந்தி நாடு முழுவதும் பாத யாத்திரை மேற்கொண்டு வருகிறார். இந்த பாத யாத்திரைக்கு பாரத் ஜுடோ யாத்ரா என்று பெயர் வைக்கப்பட்டு கன்னியாகுமாரி முதல் காஷ்மீர் வரை பயணம் மேற்கொண்டு வருகிறார்.
தமிழகம் தொடங்கி கேரளா,கர்நாடக போன்ற மாநிலங்களில் நிறைவடைந்துள்ளது. மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ள இந்த யாத்திரை தொடங்கி 65 நாட்களன நிலையில் நேற்று பாரத் ஜுடோ யாத்ரா மகாராஷ்டிரா மாநிலம் ஹிங்கோலி மாவட்டத்தை அடைந்தது.
அப்போது அவருக்கு சிறுபான்மை மக்களிடம் இருந்து வரவேற்பு கிடைத்தது, அங்கு சிறுபான்மையினரின் பிரதிநிதிகளிடம் உரையாடிய ராகுல் காந்தி இங்கு சிறுபான்மை மக்கள் தனியாக இல்லை தங்களின் உரிமைகளையம் பாதுகாப்பிற்காகவும் போராடும் மக்களோடு நான் உறுதுணையாக இருப்பேன் இஸ்லாமிய சமுதாய மக்கள் மட்டுமின்றி தலித்துகள், பழங்குடியினர்கள் போன்றவர்கள் பாதிக்கபடுகின்றனர்.இந்த அச்சத்திலிருந்து வெளியேற பயத்தை போக்க வேண்டும் என்று ராகுல் காந்தி அந்த கூட்டத்தில் பேசினார்.