குழந்தைகளின் மூளை வளர்ச்சியை அதிகரிக்க இதை செய்ங்க..!
குழந்தை வளர்ப்பு என்பது சவாலான ஒரு செயலாகும் அதே சமையத்தில் மகிழ்ச்சி அளிக்கக்கூடியதாகவும் இருக்கும். குழந்தைகளின் அறிவாற்றலை கூர்மைப்படுத்துவதில் பெற்றோர்களின் பங்கு அதிகம்.
அந்தவரிசையில் குழந்தைகளின் மூளை வளர்ச்சியை அதிகரிக்க உதவும் வழிமுறைகளை பற்றி பார்ப்போம்.
- முதலில் குழந்தைகளுக்கு வெளிப்படையாக பேச கொண்டு வர வேண்டும். சின்ன வயதிலே எந்த பயமும் இல்லாமல் தங்களின் தேவையை வெளிப்படையாக பேச கற்று கொடுப்பதில் மூளை வளர்ச்சி அடைகிறது.
- குழந்தைகளின் சிறு வயதிலிருந்தே பிரச்சனைகளை எதிர்கொள்ளும் தைரியத்தை கற்றுக் கொடுக்க வேண்டும். இதனால் அவர்கள் பிரச்சனைகளை கண்டு ஓடாமல் அதற்கான தீர்வு காண்பார்கள். இதனால் அவர்களின் சிந்தனை திறன் அதிகரிக்கிறது.
- குழந்தை எதிர்மறையான சிந்தனையில் ஈடுபடுகிறார்கள் என்றபோது வெளிப்படையான உரையாடலில் ஈடுபடும்போது அவர்களின் மூளை செயல்திறன் அதிகரிக்கிறது.
- குழந்தைகளிடன் என்னால் இது செய்ய முடியும். இதற்கான தகுதி என்னிடம் இருக்கிறது என அடிக்கடி சொல்லிவைக்கும்போது அவர்களிடம் தோல்வி பயம் மறைந்து சிந்தனைக்கான திறன் அதிகரிக்கும்.
- குழந்தைகளுக்கு வெளிப்புற விளையாட்டு மற்றும் உட்புற விளையாட்டு ஆகிய இரண்டிலும் விளையாட ஊக்குவிக்க வேண்டும் மேலும் அவர்களுடன் பெற்றோராகிய நீங்களும் சேர்த்து விளையாடும்போது அவர்களின் மனதும் சரியாக செயல்பட்டு மூளை செயல்திறன் அதிகரிக்கிறது.
- குழந்தைகளை உடற்பயிற்சி செய்வதில் பழக்கப்படுத்தும்போது அது உடல் ஆரோக்கியம், அறிவாற்றல் ஆகியவற்றை அதிகரித்து வளர்ச்சிக்கு உதவுகிறது.
- குழந்தைகளை எந்த பிரச்சனைகளுக்கும் மற்றவர்களை சார்ந்து இருக்காமல் அவர்களே தீர்வு காணும் அளவில் பழக்குவதன் மூலம் சுயசார்பு உடையவர்களாக வளர்ச்சி அடைகிறார்கள்.
- குழந்தைகளுக்கு போதுமான தூக்கத்தையும் உணவையும் பெற்றோர்கள் அளிப்பதன் மூலம் அது அவர்களின் வளர்ச்சிக்கு பெரிது உதவியாக இருக்கும்.