மல்லிகர்ஜுனா கார்கே கடிதம்..!! 3வது கட்ட தேர்தல்..?
இந்திய தேர்தல் ஆணையத்தின் அணுகுமுறை கவலை அளிப்பதாக காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வேதனை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் லோக்சபா தேர்தல் 7கட்டமாக நடைபெற்றது., அதில் முதல் கட்டமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியிலும், இரண்டாவது கட்டமாக மேற்கு வாங்களத்திலும், மூன்றாவது காட்டாமக இன்று.
இன்று தேர்தல் நிலவரம் :
லோக்சபா தேர்தல் குஜராத், கர்நாடகம் உள்ளிட்ட 10 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் உள்ள 93 தொகுதிகளில் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
இன்று காலை தொடங்கிய வாக்குபதிவு.., தற்போது வரை 69% விகிதம் வரை பதிவாகியுள்ளது.
மல்லிகார்ஜுன கார்கே கடிதம் :
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்..
அதில், அவர் குறிப்பிட்டிருப்பதாவது இந்திய தேர்தல் ஆணையத்தின் அணுகுமுறை கவலை அளிப்பதாக கூறியுள்ளார்.
வாக்குப்பதிவு புள்ளி விபரங்கள் அளிப்பதில் காலதாமதம் மற்றும் முரண்பாடுகள் ஏற்படுவதால், தேர்தல்களின் சுதந்திரமான மற்றும் நியாயமான தன்மை குறித்து கடுமையான சந்தேகங்களை எழுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது சாதாரண தேர்தல் அல்ல, நமது ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பை நிலைநிறுத்துவதற்கான போராட்டம் என குறிப்பிட்டுள்ள அவர், தேர்தல் ஆணையத்தை பொறுப்புடன் நடத்துவதற்கும் குரல் எழுப்புவது தமது கூட்டு கடமை எனவும் தெரிவித்துள்ளார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..