எழுத்து கிறுக்கச்சி – கவிதை 2
பத்து மாதம் என்னை நீ கருவில் சுமந்தாய்
நான் பிறக்க வழியில் நீ துடித்தாய்
ஆனால் அதை நீ சுமை என்று சொல்லியதில்லை…
நீ வழியில் துடித்தாய் என்று அழுகையோடு
நான் பிறந்தேன்..
உன் கைகளில் கிடைத்த மறுநொடியே அதனை
மறந்தேன்…
அம்மா உனக்கு வலி கொடுத்து நான் பிறந்தாலும்
இன்று வரை என்னை நீ காயப்படுத்தியதில்லை..
உன் உயிரியில் பாதியாக உலகிற்கு வந்தேன்….
உன் உயிரியில் பாதியாக இந்த உலகிற்கு வந்தேன்…,
என் உயிர் உள்ளவரை என்றும் உன்னை மட்டுமே
நேசிப்பேன்…