இந்தி திணிப்புக்கான பிரச்சார கருவியாக மாறிய எல்.ஐ.சி…!! முதலமைச்சர் ஸ்டாலின் பதிவு…!!
தமிழ்நாட்டில் எத்தனை ஆயுள் காப்பிட்டு நிறுவனங்கள் இருந்தாலும் எல்ஐசி நிறுவனம் மட்டுமே பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது., அப்படி இருக்கையில் LIC நிறுவனம் தன்னுடைய இணைய தளப்பக்கதை ஹிந்தி மொழிக்கு மாற்றியுள்ளது., இந்த மொழி மாற்றம் குறித்து பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும் தங்களுடைய கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்..
அந்த வகையில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தன்னுடைய கண்டனத்தை தெரிவித்துள்ளார்., இதுகுறித்து அவர் தனது எக்ஸ் வலைத்தளம் பக்கத்தில் குறிப்பிட்டிருப்பதாவது..
எல்ஐசி நிருவனம் தற்போது இந்தி திணிப்புக்கான பிரச்சார கருவியாக மாற்றப்பட்டுவிட்டது. மொழி தேர்வு செய்யும் வசதியை கூட இந்தியிலேயே சுட்டிக்காட்டப்பட்டுள்ளது..
இது இந்தியாவின் பன்முகத்தன்மையை மிதித்து, பலவந்தமாக கலாச்சார மற்றும் மொழி திணிப்பு தவிர வேறில்லை. எல்ஐசி அனைத்து இந்தியர்களின் ஆதரவுடன் வளர்ந்தது. அதன் பங்களிப்பாளர்களில் பெரும்பான்மையினரைக் காட்டிக்கொடுக்க எவ்வளவு தைரியம்…? இந்த மொழியியல் கொடுங்கோன்மையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று கோருகிறோம். என இவ்வாறே அவர் குறிப்பிட்டுள்ளார்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..