மதுவிலக்கு திருத்தச் சட்டம் 2024..! முதலமைச்சர் ஸ்டாலின் அறிக்கை..!
கள்ளக்குறிச்சியில் கடந்த மாதம் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்து இதுவரை 67 பேர் மரணம் அடைந்துள்ளனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. கள்ளச்சாராயத்தை ஒழிக்கும் விதமாக கடந்த மாதம் ஜூன் 29ம் தேதி தமிழ்நாடு மதுவிலக்கு திருத்தச் சட்டம் 2024, சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
ஆனால் ஆளுநர் ஒப்புதல் வழங்கமால் காலம் தாழ்த்தி வந்ததாக சொல்லப்படுகிறது.. அதன் பின், நேற்று ஆளுநர் ஒப்புதல் வழங்கியுள்ளார். இந்நிலையில், இன்று முதல் புதிய தமிழ்நாடு மதுவிலக்கு திருத்தச் சட்டம் 2024 அமலுக்கு வந்துள்ளது.
அதை பற்றிய விவரங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். அது தவிர மேற்கூறிய குற்றங்களில் பயன்படுத்தப்படும் வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து அசையும் சொத்துக்களும் பறிமுதல் செய்யப்படும் எனவும்.
கள்ளச்சாராயம் தொடர்பான மோசமான குற்றச் செயல்களில் தொடர்ந்து ஈடுபடுபவர்களிடம் இருந்து அவர்களது நன்னடத்தைக்கான பிணைய பத்திரத்தைப் பெற இச்சட்டத்தின் கீழ் நிர்வாக நடுவருக்கு (Executive Magistrate) அதிகாரம் அளிக்கப்பட்டிருப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
– லோகேஸ்வரி.வெ