திமுக டூ பாஜக வரை வேட்பாளர்கள் பட்டியல்..!!
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவு ஏப்ரல் 19-ஆம் தேதி நடைபெறுகிறது. தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் 20ஆம் தேதி தொடங்கிய நிலையில், வேட்புமனு தாக்கல் செய்ய 27-ஆம் தேதி கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், ஒவ்வொரு மாவட்டத்திலும் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட அரசு அலுவலகங்கள், வேட்புமனு தாக்கல் செய்வதற்கான இடங்களாக வரையறுக்கப்பட்டுள்ளன. வேட்புமனுக்கள் காலை 11 முதல் மாலை 3 மணி வரை பெறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் இன்று வேட்புமனுத் தாக்கல் செய்தனர்.
வேலூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார்
அதேபோல், ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிடும் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.
தென்சென்னை தொகுதியில் மீண்டும் போட்டியிடும் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் வேட்புமனுத் தாக்கல் செய்தார்.
திருச்சி தொகுதியில் மதிமுக சார்பில் போட்டியிடும் துரை வைகோ தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
விழுப்புரம் தொகுதியில் போட்டியிடும் விசிக வேட்பாளர் ரவிக்குமார் வேட்புமனு தாக்கல் செய்தார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் :
திருப்பூர் மக்களவை தொகுதியில் ’இந்தியா’ கூட்டணி சார்பில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சுப்பராயன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனுத்தாக்கல் செய்தார்.
விருதுநகர் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் மாணிக்கம் தாகூர் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
கன்னியாகுமரி தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் மரிய ஜெனிபர், தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.
ஆரணி தொகுதியில் பாமக சார்பில் போட்டியிடும் கனேஷ்குமார் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.
திண்டுக்கல் தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடும் பாமக வேட்பாளர் திலகபாமா தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.
தென்சென்னை மக்களவை தொகுதியில் பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தராஜன் வேட்புமனுத் தாக்கல் செய்தார்.
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் வேட்புமனு தாக்கல் செய்தார்.
கன்னியாகுமரி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் பொன்.ராதாகிருஷ்ணன் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.
மதுரை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் பேராசிரியர் இராம சீனிவாசன் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.
வேலூர் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பசுபதி வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
திருவண்ணாமலை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் கலியபெருமாள் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.
காஞ்சிபுரம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் பொரும்பாக்கம் ராஜசேகர் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.
அதிமுக தென்சென்னை வேட்பாளர் ஜெயவர்தன் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.
கோவை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் சிங்கை ராமசந்திரன் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.
மதுரை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் டாக்டர் சரவணன் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.