தமிழக பாஜக தலைவராக எல். முருகன் நியமனம்!

தமிழக பாஜக தலைவராக எல். முருகன் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சௌந்தராஜன் தெலுங்கானா மாநிலத்தின் ஆளுநராக அறிவிக்கப்பட்டார். அதன்பின் கடந்த சில மாதங்களாக தமிழக பாஜகவிற்கு தலைவர் அறிவிக்கப்படாமல் இருந்தது.

பொன்.ராதா கிருஷ்ணன், நயினார் நாகேந்திரன்,ஹெச்.ராஜா, கே.டி. ராகவன், வானதி சீனிவாசன், முருகானந்தம் என பலரின் பெயர்களும் அடிபட்டது. ஆனால் தற்போது தமிழக பாஜக தலைவராக எல். முருகன் நியமிக்கப்பட்டுள்ளதாக பாஜகவின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அறிவித்துள்ளார்.

What do you think?

‘அதிரடியாக குறைந்த தங்கத்தின் விலை’ பொதுமக்கள் மகிழ்ச்சி!

‘கொரோனாவால் சீன பொருளாதரத்திற்கு வந்த சோதனை’ இந்தியாவுக்கு அடித்த Luck !