பெண்களே ரொம்ப சிம்பலான டிப்ஸ் உங்களுக்குத்தான்..!
புளியை கெட்டியாக கரைத்து உப்பு போட்டு அதில் பச்சை மிளகாயை ஊறவைத்து பின் நிழலில் காயவைத்து எடுத்து பொரித்து சாப்பிட்டால் மோர் மிளகாயை விட அருமையாக இருக்கும்.
பகோடாவிற்கு மாவு பிசையும்போது அதில் சிறிது தயிர் மற்றும் நெய் சேர்த்து பிசைந்து பொரிக்க பகோடா மொறுமொறுவென சூப்பராக வரும்.
வறண்ட இருமல் இருந்தால் தேனுடன் மிளகு சேர்த்து சாப்பிட சரியாகும்.
சம்பள பணம் வந்ததும் முதல் செலவாக நெய் வாங்கி ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்திற்கு கொடுத்து வர விரயம் குறைந்து பணம் சேரும்.
நீண்ட நட்களுக்கு வெண்ணெய் கெடாமல் இருக்க அதன் மேல் சால்ட் உப்பை தூவி விடலாம்.
அதிகமான எண்ணெய் பிசுக்கு உள்ள பாத்திரத்தில் சிறிது வினிகர் வைத்து தேய்த்தால் அந்த பிசுபிசுப்பு போய்விடும்,
ரவா உப்பு மீந்துபோய்விட்டால் அதில் சிறிது அரிசி மாவு சேர்த்து கலந்து வடை போல தட்டி எண்ணெயில் பொரித்து எடுத்தால் ஸ்நாக்ஸ் தயார்.
அரிசி ஊறவைக்கும்போது அதில் சில ஐஸ்கட்டிகள் சேர்த்து ஊறவைத்து சாதம் வடித்தால் சாதம் உதிரிஉதிரியாக வரும்.
பெருங்காயம் கெட்டியாகிவிடாமல் இருக்க அதில் காம்புடன் ஒரு பச்சை மிளகாயை போட்டுவைக்கலாம்.
கொத்தமல்லி துவையலில் மிளகாய்க்கு பதிலாக மிளகு வறுத்து சேர்த்து அரைத்தால் துவையல் சுவையாக இருக்கும்.
பூரிக்கு மாவு பிசைந்து உருட்டும்போது சற்று தடிமனாக உருட்டி பொரித்தால் பூரி நன்றாக உருண்டையாகவும் உப்பியும் வரும்.
தோசை பொன்னிறமாகவும் மொறுமொறுப்பாகவும் வர மாவில் சிறிது கடலை மாவு சேர்த்து கலந்து சுடலாம்.
உளுத்த வடை செய்யும்போது உளுந்துடன் சிறிது துவரம் பருப்பு சேர்த்து சுட்டால் வடை மிருதுவாக இருக்கும்.