சனிக்கிழமை இறைவன் வழிபாடு : கிரக தோஷங்கள் நீக்கும் வாராஹி அம்மன்..!
இறைவனை வழிபாடு செய்வதற்கு நாள், கிழமை, நேரம் அனைத்தும் மிக முக்கியமான ஒன்று. அதிலும், சில நாட்களில் சில தெய்வங்களை வழிபாடு செய்தால், சிறந்த பலன் கிடைக்கும்.
இறைவன் வழிபாட்டில் இன்று நாம் காண இருக்கும் தெய்வம் தான் வாராஹி அம்மன்.
வராஹி அம்மனிற்கும் உகுந்த நாள் எது, எந்த நாளில் என்னென்ன பலன்கள்..
வராஹி அம்மனுக்கு அஸ்வரூபா, மஹாவராஹி, லகு வராஹி என 8 சிறப்பு அம்சங்களில் காட்சி அளிப்பார்.
அதுவும் செவ்வாய், வெள்ளி, ஞாயிறு கிழமைகளில் வழிபாடு செய்தாலும் கூடுதல் பலனை தரும்.
ஞாயிற்றுக்கிழமை : நோயின் பிடியில் சிக்கி தவிப்பவர்கள், நோய் குணமாக வாரந்தோறும்
ஞாயிற்றுக்கிழமை வழிபாடு செய்தால், நோய்கள் நீங்கும்.
திங்கட்கிழமை : மனநலம் குன்டிறியவர்கள், மன கவலையில் தவிப்பவர்கள், எதிலும் பயம் கொள்வர்கள்,
திங்கட்கிழமையில் வழிபாடு செய்தால். இந்த அனைத்து பிரச்னைகளும் நீங்கும்.
செவ்வாய்க்கிழமை : நிலம், வீடு, பகை, நீங்க
இந்த நாளில் வழிபாடு செய்ய வேண்டும்.
புதன்கிழமை : நிலம், கடன் , சொத்து பிரச்னை, செய்யதா தவறுக்கு பழி.., என தவிபவர்கள்
இந்த நாளில் வழிபட்டு வந்தால், இவை அனைத்தும் நீங்கி வெற்றி கிடைக்கும்.
வியாழக் கிழமை : குழந்தை இன்றி தவிப்பவர்கள் வாரந்தோறும் வழிபாடு செய்து வந்தால், குழந்தை வரம் கிடைக்கும்.
மற்றும் கல்வி அறிவில் பின் தங்கி இருப்பவர்களும் வேண்டிக் கொள்ளலாம்.
வெள்ளிக்கிழமை : அன்று வழிபாடு செய்து வந்தால் திருமணம் ஆகாதவர்களுக்கு, மாங்கல்ய வரம் கிடைக்கும்.
திருமணம் ஆனா பெண்கள் வழிபாடு செய்து வந்தால், தீர்க்க சுமங்கலியாக இருப்பார்கள். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும்.
சனிக்கிழமை : அன்று வாரந்தோறும் வழிபாடு செய்து வந்தால் கிரக தோஷங்கள் நீங்கி விடும்.
குழந்தைகளுக்கு அறிவு திறன் அதிகரிக்கும், நோய் நொடி இல்லாமல் இருப்பார்கள்.
குடும்பம் ஒற்றுமையாக இருக்கும்.
மேலும் இதுபோன்ற பல தெய்வீக தகவல்களை பற்றி தெரிந்துக் கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்.
வெ.லோகேஸ்வரி