கடற்கரையில் கடல் ஆமைகள் உயிர் இழப்பு…!! ஆமை வளர்ப்பு ஆர்வலர்கள் கொடுத்த விளக்கம்…!
சென்னை ஈசிஆர் கடற்கரையில் ஒரே நாளில் நான்கு கடல் ஆமைகள் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளது.
சென்னை கிழக்கு கடற்கரை சாலை கடற்கரை பகுதியில் அக்டோபர் முதல் அடுத்து சில மாதங்கள் வரை ஆலிவ் ரிட்லி வகை கடல் ஆமைகளின் முட்டையிடும் காலமாகும். இதனால் ஆலிவ் ரிட்லி கடல் ஆமைகள் இரவு நேரத்தில் இந்த கடலோரப் பகுதிகளில் வந்து முட்டை இட்டு பின்பு மீண்டும் கடலுக்கே திரும்பிச் செல்வது வழக்கம்.
அவ்வாறு ஆமைகள் முட்டையிட கடற்கரைக்கு வரும் போது மீண்டும் கடலில் திரும்பி செல்லாமல் கடற்கரையில் இறந்துள்ளது ஆமைகள். சென்னை கொட்டிவாக்கம் குப்பம் கடலோரப் பகுதியில் ஒரேநாளில் நான்கு ஆலிவ் ரிட்லீ வகை கடல் ஆமைகள் அடுத்தடுத்து இறந்த நிலையில் கரை ஒதுங்கி உள்ளன.
கடந்த சில நாட்களாக கடல் சீற்றத்துடன் காணப்பட்ட நிலையில் அலையின் வேகத்தில் படகில் சிக்கி உயிரிழந்திருக்கலாம் என ஆமை வளர்ப்பு ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..