பிரசவத்தில் தாய் சேய் உயிர் இழப்பு..!! காரணமான மருத்துவர்கள்..!! பரபரப்பான ஆரணி..!!
அரசு மருத்துவனையில் பிரசவதின் போது உயிரிழந்த தாய் மற்றும் சேய் தன் மனைவியும் குழந்தையும் உயிரிழப்புக்கு காரணம் மருத்துவமனை நிர்வாகம் என கணவர் காவல் நிலையத்தில் புகார்..
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி தாலூக இரும்பேடு கிரமாத்தை சேர்ந்த கோடீஸ்வரன் இவர் ஆவடி பெட்டாலியன் சிறப்பு காவலராக பணிபுரிந்து வருகிறார் இவரது மனைவி ராணிப்பேட்டை மாவட்டம் மாம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த அனிதா (24) கர்ப்பிணியாக இருந்த இவருக்கு கடந்த 12ம் தேதி பிரசவத்திற்கான தேதி வழங்கப்பட்டதால், வேலூர் அடுகம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கபட்டு இருந்தார்.
பிரசவத்திற்காக வழங்கப்பட்ட தேதி கடந்து சென்றதால் தன் மனைவிக்கு அறுவை சிகிச்சை செய்தாவது பிரசவம் பார்க்கும்படி அனிதாவின் கணவர் மருத்துவமனையை அணுகி கேட்டு உள்ளார். இதற்கு மருத்துவமனை நிர்வாகம் சார்பாக அலட்சியமாக பதில் அளித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று அனிதா தனக்கு பிரசவ வலி ஏற்பட்டு இருப்பதாக காலையில் கூறியுள்ளார். இதனை அடுத்து கோடீஸ்வரன் மருத்துவரை அணுகி அறுவை சிகிச்சை செய்தாவுது பிரசவம் பார்க்கும்படி கூறியுள்ளார்.
ஆனால் நேற்று மாலை பிரசவத்துக்கான சிகிச்சை மருத்துவர்கள் தொடங்கியதாகவும் தொடர்ந்து சிகிச்சை பெற்று அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று பிரசவத்தின் போது குழந்தை இறந்தது பிறந்து உள்ளது.
அதன் பின்னர் தாயும் இருந்ததாக மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து மருத்துவமனையில் பணி புரியும் மருத்துவர்களால் தான் தன் மனைவியும் தன் குழந்தையும் இருந்துள்ளதாக கோடீஸ்வரன் வேலூர் கிராமிய காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..