தொலைந்து போன தங்க மீனாட்சி அம்மன் சிலை பொன்னேரியில் கண்டெடுப்பு..!!
பொன்னேரியில் ஆரணியாற்றில் ஒரு அடி உயரமுள்ள ஐம்பொன்னாலான மீனாட்சி அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த ஆலாடு பகுதியில் உள்ள ஆரணியாற்றில் ஐம்பொன்னாலான மீனாட்சி அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டது. ஆரணியாற்றில் அப்பகுதி மக்கள் மீன்பிடித்து கொண்டிருந்த போது, சிலை ஒன்று தட்டுப்பட்டு உள்ளது.
அதனை எடுத்து பார்த்த போது கையில் கிளியுடனும், கிரீடத்தில் பிறையுடனும் ஒரு அடி உயரத்தில் மீனாட்சி அம்மன் சிலை தென்பட்டுள்ளது, அதனை எடுத்து சென்று ஆலாடு பகுதியில் வைத்து அம்மனை வழிபட்டுள்ளனர். பின் வருவாய்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
தகவலின் பெயரில் அங்கு வந்த வருவாய் துறை அதிகாரிகள், ஐம்பொன்னாலான மீனாட்சி அம்மன் சிலையை மீட்டு பொன்னேரியில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். அங்கு அதனை ஆய்வு செய்த வட்டாட்சியர் செல்வகுமார், பழமை வாய்ந்த ஐம்பொன்னாலான மீனாட்சி அம்மன் சிலையை அங்குள்ள பதிவறையில் வைத்தார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..