நீங்கள் பார்க்க மறந்த பல முக்கிய செய்திகள்..!! உங்கள் பார்வைக்காக..!!
சென்னை கந்தன்சாவடி OMR சாலையில் உள்ள ஶ்ரீ காளியம்மன் திருக்கோயிலில் மஹா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. கடந்த 12 ஆண்டுகளுக்கு பிறகு கோயில் புனரமைப்பு பணிகள் மேற்கொண்டு ஶ்ரீ காளியம்மன் விமான கோபுரத்தில் உள்ள கலசத்தில் புனித நீர் ஊற்றி மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழாவில் எந்த ஒரு அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்க ஏராளமான காவல்துரையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
ஆலந்தூர் சவுரி தெரு பகுதியில் உள்ள திமுக நிர்வாகி நாகூர் கனியின் புது வீட்டின் கிரகப்பிரவேச நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் குரு சிறு நடுத்தர தொழில் துறை அமைச்சர் தாமு அன்பரசன் உள்ளிட்டோருக்கு சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்று வாழ்த்து தெரிவித்தனர். இந்நிகழ்வில்,மதுரவாயில் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் காரம்பாக்கம் கணபதி மண்டல குழு தலைவர் சந்திரன் உள்ளிட்டோரும் கலந்த்து கொண்டு சிறப்பித்தனர்
இந்தியக் காவலர் தினத்தை முன்னிட்டு புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள நினைவிடத்தில் புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே மற்றும் உயர் அதிகாரிகள் மலர் அஞ்சலி செலுத்தினர். 60 குண்டுகள் முழங்க உயிர் நீத்த காவலர்களுக்கு மரியாதை செய்யப்பட்டது. இந்நிகழ்வில் ஏராளமான காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர். .
அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஆயுதப்படை காவலர் மைதானத்தில் பணியின் போது உயிர் தியாகம் செய்த காவலர்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் காவலர் நினைவு தின நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செல்வராஜ் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர் .
வேலூரில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் சி.ஐ.எஸ்.எப் தேசிய பாதுகாப்பு படை, எல்லை பாதுகாப்பு படை, தொழிற்பாதுகாப்பு படை, காவலர்கள், தேசிய பேரிடர் மீட்பு குழு காவலர்கள் என மொத்தம் 213 காவல்ர்களுக்கு வீரவணக்க நாள் அனுசரித்தனர். இதில் வேலூர் காவல்துறை துணை தலைவர் தேவராணி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் மற்றும் காவலர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.
திருப்பத்தூர் மாவட்டம் நகராட்சிக்கு சொந்தமான சேர்மன் வீரபத்திர முதலியார் பூங்கா செயல்பட்டு வருகிறது. இதில் சிறுவர்கள் விளையாடுகின்ற விளையாட்டு உபகரணங்கள் உடைந்துள்ளதாகவும், பூங்கா முழுவதும் குப்பைகள் உள்ளதாக பல்வேறு கருத்துகளை முன்வைத்தனர். மேலும் சிதலமடைந்த பூங்காவை சீரமைக்க வேண்டும், சிசிடிவி கண்காணிப்பு கேமரா பொருத்தி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..