நீங்கள் பார்க்க மறந்த பல முக்கிய செய்திகள்..!! உங்கள் ஊரில் இன்று..!!
மயிலாடுதுறை அடுத்த பல்லவராயன் பேட்டை பகுதியில் புகழ்பெற்ற ஸ்ரீ ஸ்ரீநிவாச பெருமாள் ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயத்தில் ஆண்டு பிரம்மோற்ச விழாவின் முக்கிய நிகழ்வான திருதேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக பெரும்பாலான வடமாநில தொழிலாளர் பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தேரினை இழுத்து வழிபட்டனர். பின்னர் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களின் வாசலில் பக்தர்கள் பெருமாளுக்கு அர்ச்சனை செய்து வழிபாடு நடத்தினர்.
திருவண்ணாமலை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடும் வெயில் காரணமாக அனல் தகித்து பொதுமக்கள் மிக அவதிப்பட்டு வந்த நிலையில் திடீரென இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ததால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் ஏரி குளம், கிணறு உள்ளிட்ட நீர் ஆதாரங்களில் நீர்மட்டம் உயரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்களும் , விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திருவள்ளுர் அருகே கவரப்பேட்டையில் நிகழ்ந்த ரயில் விபத்தில் பாதிக்கபட்ட மக்களை மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச் செயலாளர் எஸ் எஸ் ஹாரூண் ரசிது அறிவுறுத்தலின்படி மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாநில மீட்பு குழுவுடன் இணைந்து பாதிக்கப்பட்ட மக்களை மீட்டு மருத்துவமனைக்கும், மண்டபங்களுக்கும் அனுப்பி வைத்தனர்.
வேலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் லட்ச்சார்ச்சணைகளும் வேதமந்திரங்களும் முழங்க நவராத்திரி இறுதி நாள் விழா கோலகலமாக நடைபெற்றது. இதில் அம்மனுக்கு சரஸ்வதி அலங்காரம் செய்யப்பட்ட பின்னர் மகாதீபாராதனைகளும் காண்பிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பரத நாட்டிய கலைநிகழ்ச்சிகளும் நடைப்பெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்
கரூர், வெங்கமேடு பகுதில் அமைந்துள்ள அன்னை வித்யாலயா பள்ளியில் விஜயதசமியை முன்னிட்டு வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் குழந்தைகளுக்கு தமிழ் மொழியின் முதல் உயிர் எழுத்தான அ என்ற எழுத்துக்களை எழுதி கற்றலை தொடங்கினர். இதில் ஏராளமான குழந்தைகள், தம் பெற்றோருடன் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து பள்ளியில் சேர்க்கப்பட்ட குழந்தைகளுக்கு புத்தகங்களும் இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த மூலகாங்குப்பம் கிராமத்தில் வனப்பகுதியை ஒட்டி உள்ள ஜலபதி என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் சுமார் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று பதுங்கி இருந்தது. இந்த மலைப்பாம்பு காட்டுப்பன்றி குட்டியை முழுங்கி விட்டதால் வேகமாக செல்ல முடியாமல் தண்ணீருக்காக கிராமப் பகுதியை நோக்கி வந்துள்ளது.இதனை தொடர்ந்து தகவல் அறிந்து விரைந்து வந்த குடியாத்தம் தீயணைப்பு துறையினர் மலைப்பாம்பை பிடித்து குடியாத்தம் வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த பாணாவரம் அருகே உள்ள பைரவ காலணியில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறார்கள் இந்த கிராமத்து மக்கள் பாரம்பரியமிக்க ஈச்ச ஓலை பாய் பின்னும் தொழிலை செய்து வருகிறார்கள். ஆனால் தற்போது இந்த ஈச்சம் பாயை மக்கள் யாரும் பயன்படுத்துவதில்லை எனக்க்கூறி அந்த பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே பாரம்பரமிக்க ஈச்ச ஓலை பாயின் மகத்துவத்தை பற்றி அரசு விழிப்புணர்வு ஏற்படுத்தினால் வறுமையில் இருந்து விடுபடுவோம் என கூறி அரசுக்கு கோரிக்கை வைக்கின்றனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..