பிரிந்தாலும் காதல் குறையாது.. இறந்த மனைவிக்காக கணவன் செய்தது..? ஊரும் உறவும் – 25
“காதல்”. எவ்வளவு அழகான ஒன்று. பலர் மனதிலும் இருக்கும் ஒன்று. இன்று பலரிடம் இல்லாத ஒன்று. பெரும்பாலானோர் காதல் திருமணம் செய்துக் கொள்வது, வழக்கம். ஆனால் ஒரு சிலர் அந்த காதலை கடைசி வரை காதலோடு இல்லாமல் விவாகரத்து செய்துக் கொண்டு பிரிந்து விடுகிறார்கள்.
இன்னும் சிலர் பிரிந்த பின்னும் நினைவில் வாழ்வது உண்டு, அப்படி இறந்த மனைவியின் நினைவில் வாழ்ந்து கொண்டிருக்கும் சுப்பிரமணியன் கதையை பார்க்கலாம்.
கோயம்புத்தூர் மாவட்டம் ரத்னபுரி பகுதியை சேர்ந்த இவர்.., கூலி வேலை செய்து வருபவர். மூன்று ஆண்டிற்கு முன்பு இவரின் மனைவி சரோஜினி இறந்துவிட்டார். இவர் இருந்த வரை சுப்பிரமணியை அவ்வளவு காதலுடன் பார்த்துக் கொள்ளுவாராம்.
இவர் இறந்த பின் தான் சுப்பிரமணிக்கு மனைவியின் அருமை தெரிந்துள்ளது. மனைவி இறந்த அடுத்த நாளே அவரின் சமாதிக்கு சென்று.., அழுத படியே சமாதியில் விழுந்து கிடந்துள்ளார். அந்த நேரம் என்றும் உங்களுடன் நான் இருக்கிறேன் என்பதை போல அவர் மனைவி உணர்த்தியுள்ளார்.
மனைவி இறந்த நாளில் இருந்து இன்று வரை அதாவது மூன்று ஆண்டு வரை தினமும் காலை கோவிலுக்கு செல்லும் முன் மனைவியின் சமாதிக்கு சென்று விளக்கு ஏற்றி விட்டு மனைவியை வணங்கி விட்டு செல்வதை வழக்கமாக வைத்துள்ளார்.
மாலையிலும் மனைவியின் சமாதிக்கு சென்று.., இன்றைய பொழுதில் என்ன நடந்தது என்று சொல்லி.. பேசுவாராம்.., மனைவி இறந்த பின் நானும் இறந்திருப்பேன். ஆனால் எனக்கு என் ஆசையெல்லாம் என்
மனைவிக்கு தாஜ்மஹால் கட்ட வேண்டும் என்ற குறிக்கோளுடன் வாழ்ந்து கொண்டு இருப்பதாக கூறினார்.
மேலும் இதுபோன்ற பல உண்மை கதைகள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்