அன்பை மாரியெனப் பொழியும்..! முதமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து..!
இன்று உலகம் முழுவதும் அன்னையர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் அன்னையர் தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், தூய்மையான அன்பை மாரியெனப் பொழியும் தாய்மார்கள் அனைவருக்கும் அன்னையர் நாள் வாழ்த்துகள் என பதிவிட்டுள்ளார். ஈன்றவள் நம்மைச் சான்றோன் எனக் கேட்க வாழ்ந்து அன்னையரைப் போற்றுவோம் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
இன்று அன்னையர் தினம் கொண்டாடுவதை போல செவிலியர் தினமும் கொண்டாடப்பட்டு வருகிறது.., அன்பின் உருவமாக விளங்கி தன்னலம் கருதாமல் தூண்களாக திகழும் செவிலியர்களுக்கு வாழ்த்துக்கள் என முதமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..