திராவிட கழக தலைவர் கீ.வீரமணி இன்று தனது 90வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அப்போது செய்தியாளர் சந்திப்பில் முதல்வர் முக ஸ்டாலின் ஆட்சிக்கு என்றும் எங்களின் பேராதரவு உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.
இன்று திராவிட கழக தலைவர் கீ. வீரமணி தனது அவரின் பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். பல அரசியல் தலைவர்களும் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களும் வீரமணி க்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். முதல்வர் ஸ்டாலின் திக தலைவர் கீ.வீரமணியை நேரில் சென்று பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கீ.வீரமணி கூறுகையில், தான் என்றும் ஒரே கொளகியில் பயந்து வருவதாகவும் திராவிட மாடல் ஆட்சியை பாதுகாக்க தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தலைமையிலான ஆட்சிக்கு நாங்கள் எப்போதும் பேராதரவு அளிப்போம் என்று அவர் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க போன்ற அமைப்புகளால் சமூக நீதிக்கு தற்போது ஆபத்து எழுந்துள்ளது அதனை முறியடிப்பதே தங்களின் முதல் பணி என்றும் 10% இடஒதுக்கீடு மற்றும் தனியார் மயமாக்கல் போன்ற கொடுமைகளை எதிர்த்து அரசு சட்ட போராட்டத்தை நடத்தி வருகிறது. இருப்பினும் மக்கள் போராட்டத்தை திராவிட கழகம் என்றும் நடத்தும் என்று அவர்செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.