“பணத்திற்காக சொந்த மாமனையை கடத்திய மச்சான்” போலீசில் சிக்கியது எப்படி..?
திருப்பத்தூர் அருகே தொழிலதிபரை கத்தி முனையில் கடத்தி 1 கோடி ரூபாய் பேரம் பேசி 12 லட்சம் பணத்தை பறித்த கும்பல்., மூளையாக செயல்பட்ட தொழிலதிபரின் மச்சான், பாஜக நிர்வாகி உட்பட 6பேர் கைது..
திரும்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த இடையம்பட்டி நடுவூர் பகுதியில் பிரபல சன்பீடி உரிமையாளர் யுவராஜ் இவருடைய மகன் தியாகராஜ் (39) இவர் முன்னாள் யூத் காங்கிரஸ் மாநில செயலாளராக இருந்துள்ளார். தியாகராஜின் மனைவி அகிலா இவருடைய அண்ணனான அரவிந்தன் பொன்னேரி ஊராட்சி மன்ற துணை தலைவராக உள்ளார்.
இருவரும் ஒன்றாக சுற்றி திரிவது வழக்கம் மேலும் தியாகராஜனிடம் அதிக பணம் இருப்பதை அறிந்த அரவிந்தன் பணம் பறிக்கும் நோக்கில் அவருடைய நண்பர் மக்கள் இயக்கத்தின் மாவட்ட மாணவரணி தலைவர் சேண்டி (எ)சந்தோஷ் என்பவரிடம் தியாகராஜனை கடத்தி அவரிடம் பணம் பறிக்கலாம் என கூறியுள்ளார். அதன் காரணமாக அரவிந்தன் மற்றும் சந்தோஸ் ஆகிய இருவரும் தியாகராஜனை கடத்த ஒரு கடத்தல் கும்பலை உருவாக்கியுள்ளனர்.
இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 23ம் தேதி எலவம்பட்டி பகுதியில் உள்ள ஆர்.டி.ஓ அலுவலகத்திற்கு ஓட்டுநர் உரிமம் புதுப்பிக்க இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது திட்டமிட்டபடி இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் மற்றும் காரில் வந்த 8பேர் கொண்ட கும்பல் தியாகராஜ் சென்ற இருசக்கர வாகனத்தை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி அழைத்துச் சென்றுள்ளனர்.
அப்போது சந்தோஷின் மற்றொரு நண்பரான வீரமணிகண்டன் இவர் பார் கவுன்சிலில் பதிவு செய்யாத வழக்கறிஞராகவும், பாரதிய ஜனதா கட்சியின் வெளிநாட்டு வாழ் பிரிவு திருப்பத்தூர் மாவட்ட தலைவராக உள்ளார். இவர் தனது மாமனாருக்கு சொந்தமான லக்கி நாயக்கன் பட்டியில் உள்ள பார்ம் ஹவுஸில் கடத்திவரப்பட்ட தியாகராஜனை அடித்து வைத்து கடத்தல் கும்பலுடன் ஒரு கோடி பணம் கேட்டும் சரா மாறியாக தாக்கியும் மிரட்டியுள்ளனர்..
அதன்பின் தியாகராஜ் என்னிடம் அவ்வளவு பணம் இல்லை என் அப்பாவிடமும் நான் பேசுவதில்லை எனவே என்னுடைய மச்சானான அரவிந்தனுக்கு போன் செய்து நான் பணத்தைக் கேட்டுப் பார்க்கிறேன் எனக் கூறியுள்ளார். தியாகராஜனும் தனது மச்சான் அரவிந்தனுக்கு போன் பண்ணி அவசரமாக பணம் வேண்டும் உன்னிடம் இருக்கும் பணம் அனைத்தையும் எடுத்து வா என்று கூறி தொலைபேசியை துண்டித்துள்ளார்.
அப்போது கடத்தல் கும்பல் பிளான் பண்ண படி முதலில் ஒரு கோடி கேட்டு மிரட்டி உள்ளார் அவ்வளவு பணம் இல்லை என்பதால் 50 லட்சம் கேட்டுள்ளனர். அதுவும் தர முடியாது என்று கூறியதற்கு பின்பு படிப்படியாக குறைந்து இறுதியில் 12 லட்சம் கொடுப்பதாக அரவிந்தன் ஒப்புக்கொண்டார். இவை அனைத்தும் அரவிந்தன் திட்டமிட்டபடியே நடந்தேறி வந்துள்ளது.
அதன் பின்னர் கடத்தல் கும்பல் அரவிந்தனை தர்மபுரி மேம்பாலம் கீழே வரவைத்து 12 லட்சம் ரூபாயை கடத்தல் கும்பலிடம் கொடுத்துள்ளார். அதன் பின் மருத்துவமனையில் காயங்களுடன் அனுமதிகபட்டார்..
தகவலறிந்து வந்த அவரது குடும்பத்தினர் கந்திலி காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து தனிப்படைகள் அமைத்து கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் குறித்து தீவிர விசாரணையில் இறங்கினர். அப்போது அரவிந்தனை போலீசார் அழைத்து தொடர் விசாரணை நடத்தியதில் அரவிந்தன்., தியாகரஜனை கடத்தியதை ஒப்புக்கொண்டுள்ளனர்.
அவர்கள் கொடுத்து வாக்கு மூலத்தின் அடிப்படையில் கடத்தல் சம்பவத்துக்கு முக்கிய காரணமாக இருந்த விஜய் மக்கள் இயக்கத்தின் மாவட்ட மாணவரணி தலைவர் சந்தோஷ், வீரமணிகண்டன், தினகரன், அஜித்குமார், விஷ்வா, உள்ளிட்ட ஆறு பேரை தனிபடை போலீசார் பிடித்துள்ளனர்..
மேலும் இந்த கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட தலைமறைவாக உள்ள இரண்டு பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். சொந்த மாமனையே அடியாட்கள் வைத்து கடத்தி பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்ட மச்சான் மற்றும் தமிழக வெற்றிக்கழக நிர்வாகி பாஜக நிர்வாகி உள்ளிட்டோரால் திருப்பத்தூரில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..