சினிமாவிற்காக டெல்லி கணேஷ் செய்தது..!! டெல்லி கணேஷ் 400..!!
நடிகர் டெல்லி கணேஷ் 1976ம் ஆண்டு சினிமாவில் அறிமுகமானார்.. ஆனால் அதற்கு முன்பு “தக்ஷிண பாரத நாடக சபா” (DBNS) என்ற “டெல்லி நாடகக் குழுவின்” உறுப்பினராக பணியாற்றினார்…
கடந்த 1964ம் ஆண்டு முதல் 1974ம் ஆண்டு வரை இந்திய விமானப்படையில் டெல்லி கணேஷ் பணியாற்றினார்., அதன் பின் சினிமாவின் மீது உள்ள ஆர்வத்தால் சினிமாவில் வாய்ப்பு தேடி சென்னை வந்தார்..
கடந்த 1977ம் ஆண்டு பட்டினப்பிரவேசம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில்.. அறிமுகமானார்.. தமிழ் திரையுலகுக்கு இவரை இயக்குனர் கே. பாலசந்தர் தான் அறிமுகம் செய்தார். என்பது குறிப்பிடதக்கது..
இவர் பெரும்பாலான படங்களில்., துணை நடிகராகவும், நகைச்சுவை நடிகராகவும், முக்கிய கதாபாத்திரங்களில் மட்டுமே ஆரம்பத்தில் நடித்து வந்தார்..
அதன் பின்னர் அபூர்வ சகோதரர்கள் என்ற படத்தில் வில்லனாக நடித்தது ரசிகர்களிடயே நல்ல வரவேற்பை பெற்றது..
அதன் பின்னர் சிந்து பைரவி, நாயகன், மைக்கேல் மதன காமராஜன், அபூர்வ சகோதரர்கள், ஆஹா, தெனாலி, சங்கமம், அவ்வை சண்முகி, இந்தியன் 2 உள்பட 400-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
இதுவரையில் இவர் 8 சின்னத்திரை தொடர்களிலும்., 1979ம் ஆண்டு பசி திரைப்படத்திற்கு “தமிழ்நாடு மாநில அரசின் சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டது..
அதன் பின்னர் 1993 – 1994ம் ஆண்டிற்கான தமிழ்நாடு மாநில அரசின் “கலைமாமணி விருதும்” இவருக்கு வழங்கப்பட்டது..
ஆரம்பத்தில் நாடாக நடிகராக இருந்து., தமிழ் சினிமாவில் அறிமுகமாகி., காமெடியனாக, வில்லனாக என நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.. அதேபோல் டப்பிங் கலைஞராகவும் இவர் பணியாற்றியுள்ளார்.. தமிழ் சினிமாவில் இவருடன் சேர்ந்து நடிக்காத நடிகர்களே இல்லை என சொல்லலாம்.
தூத்துக்குடியில் பிறந்த இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார். என்பது குறிப்பிட தக்கது..
இப்படி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த டெல்லி கணேஷ் இன்று காலை வயது முதிர்வு காரணமாக காலமானார்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..