மாதவரம் தீவிபத்து; 2வது நாளாக தொடரும் போராட்டம்

சென்னையை அடுத்த மாதவரம் ரசாயன கிடங்கில் ஏற்பட்ட தீயை அணைப்பதற்கு தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் முயற்சித்து வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் மாதவரம் 200 அடி சாலையில் ரஞ்சித் என்பவருக்குச் சொந்தமான ரசாயனக் கிடங்கு செயல்பட்டு வந்தது. அங்கு சீனா, கொரியா நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரசாயனப் பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நேற்று மாலை 3 மணி அளவில் திடீரென அந்த ரசாயன கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது.

தீ மளமளவெனப் பரவி பல அடி உயரத்துக்கு கொளுந்து விட்டு எரிந்தது. இதனால் ஏற்பட்ட வெப்பத்தால் அருகில் இருந்த வீடுகளும், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களும் சேதமடைந்தன. மேலும், இந்த விபத்தால் 100 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தீ விபத்தால் அப்பகுதி முழுவதும் கடுமையான புகை மூட்டம் காணப்படுகிறது. இந்த தீ விபத்தால் அப்பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். புகையால் கண் எரிச்சல் அதிகமாக இருப்பதாகவும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மிகவும் சிரமப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

What do you think?

“மாஸ்டருக்கு மாஸான முத்தம்” – விஜய் vs விஜய் சேதுபதி

அந்தந்த பள்ளிகளிலேயே பொதுத்தேர்வு மையங்கள்; வைகோ வலியுறுத்தல்