தி.மு.க. எம்.எல்.ஏ காத்தவராயன் காலமானார்

குடியாத்தம் திமுக எம்.எல்.ஏ காத்தவராயன் உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் சட்டமன்ற தொகுதி திமுக எம்.எல்.ஏ காத்தவராயன், சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் உடல் நலக்குறைவுக்காக சிகிச்சை எடுத்து வந்தார். இந்நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். மறைந்த எம்.எல்.ஏ காத்தவராயன் திருமணம் செய்துகொள்ளாமல் தனியாக வசித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு மே மாதம் நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்தலில், திமுக சார்பில் போட்டியிட்டு காத்தவராயன் வெற்றி பெற்றார்.

திருவெற்றியூர் தொகுதியின் திமுக எம்.எல்.ஏ கேபிபி சாமி நேற்று (பிப்-27) உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இதனால், சட்டப்பேரவையில் திமுக எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 98 ஆக குறைந்துள்ளது. கடந்த இரண்டு நாட்களில் அடுத்தடுத்து 2 திமுக எம்.எல்.ஏக்கள் உயிரிழந்துள்ளது திமுகவினரிடையே அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

What do you think?

டெல்லி வன்முறையில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம்: கெஜ்ரிவால் !

“பொறியியல் கல்வியில் வேதியியல் கட்டாய பாடமாக நீடிக்க வேண்டும்” – வைகோ கோரிக்கை