ம.பியில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்த்த பாஜக?

காங்கிரல் அதிருப்தி தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

230 பேர் உள்ள மத்தியபிரதேச சட்டமன்றத்தில் காங்கிரசுக்கு ஆதரவாக 117 எம்.எல்.ஏ.க்களும், பாஜகவுக்கு 107 உறுப்பினர்களும் உள்ளனர். இந்நிலையில் மாநில காங்கிரஸ் தலைவராகும் ஜோதிராதித்ய சிந்தியாவின் முயற்சிக்கு முதலமைச்சர் கமல்நாத் முட்டுக்கட்டை போடுவதால் அங்கு உட்கட்சிப் பூசல் உருவானது.

26-ஆம் தேதி நடக்கவுள்ள மாநிலங்களவை எம்.பி.தேர்தலில் காங்கிரஸ், பாஜக தலா ஒரு இடத்தில் வெற்றி பெறும் நிலையில் உள்ளது. அதேசமயம் 3-வது எம்.பி.யை தேர்ந்தெடுப்பதில் இழுபறி நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் ஜோதிராதித்ய சிந்தியா தலைமையில் 17 எம்.எல்.ஏ.க்கள் திடீரென காணாமல் போயுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த முதலமைச்சர் கமல்நாத் டெல்லியிலிருந்து அவசரமாக போபால் வந்தடைந்தார். பின்னர் தனது இல்லத்தில் கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் ரகசிய ஆலோசனை நடத்தினார். இதில் திக் விஜய்சிங் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

ஜோதிராதித்ய சிந்தியா-ராகுல் காந்தி-கமல்நாத்

இதையடுத்து மாநில அமைச்சரவையை விரிவாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், முதலமைச்சர் கமல்நாத் தனது அமைச்சர்கள் அனைவரையும் ராஜினாமா செய்யுமாறு வலியுறுத்தியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

முதல்வர் கமல்நாத் அமைச்சரவை கூண்டோடு ராஜினாமா செய்யுமாறு நெருக்கடி கொடுக்கப்பட்டதையடுத்து, மத்திய பிரதேச அரசியலில் பரபரப்பு தொற்றியுள்ளது. இந்நிலையில் பிரதமர் மோடியையும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் சந்தித்த பின்னர் காங்கிரசிலிருந்து விலகுவதாக ஜோதிராதித்ய சிந்தியா அறிவித்துள்ளார்.

இதனால் மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சியமைக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இது காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. .

What do you think?

சீமான் மீது கமிஷனரிடம் புகார் – நடிகை விஜயலட்சுமி அதிரடி

கர்நாடகாவில் களமிறங்கிய கொரோனா; 4 பேருக்கு நோய் தொற்று உறுதி