மதிமுக எம்பி கணேசமூர்த்தி தற்கொலை முயற்சி..!! தற்கொலையின் பின்னணி..?
தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அனைத்து கட்சிகளும் தங்களது வேட்பாளர்களை அறிமுகபடுத்தி பிரசாரத்தை தொடங்கி உள்ளனர். இதனால் தமிழகத்தில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.
அனைத்து கட்சி தலைவர்களும் தீவிர பிரசாரத்தை தொடங்கி பணியாற்றி வரும் இந்நிலையில் ஈரோடு எம்பி கணேச மூர்த்தி தற்கொலைக்கு முயற்சிதுள்ள சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 2019 லோக்சபா தேர்தலில் மதிமுக சார்பில் ஈரோடு தொகுதியில் நின்ற கணேச மூர்த்தி வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்று எம்பியானார். கடந்த 5ஆண்டுகளாக எம்பியாக மக்களுக்கு பணியாற்றி வரும் இவர் தற்போது தற்கொலைக்கு முயற்சித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலைக்கான காரணம் :
இன்று காலை வீட்டில் பூச்சி மருந்து குடித்து மயங்கிய நிலையில் இருந்த அவரை மீட்ட உறவினர்கள் சிகிச்சைக்காக ஈரோடு தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர் அதன் பின் மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் உறவினர்களிடம் விசாரணை மேற்கொண்ட போது சில திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
வரும் லோக்சபா தேர்தலில் மதிமுகவுக்கு ஈரோடு தொகுதி ஒதுக்கப்படவில்லை. என்பதாலும் அவருக்கு மற்ற தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கவில்லை. என்பதாலும் மனஉளைச்சலுக்கு ஆளாகி தற்கொலைக்கு முயற்சித்து இருக்கலாம் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் கணேச மூர்த்தியின் உண்மையான காரணம் என்னவென்று யாருக்கும் தெரியவில்லை. இந்த சம்பவம் ஈரோடு மதிமுக நிர்வாகிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..