மதுரை CAA போராட்டத்தில் ஒருவர் தீக்குளிக்க முயற்சி!

மதுரையில் நடைபெற்ற சிஏஏவுக்கு எதிரான போராட்டத்தில் ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து மதுரையில் இன்று காலை இஸ்லாமிய அமைப்பைச் சேர்ந்த சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மதுரை மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தை முற்றுகையிட சென்றனர். காவல்துறையின் அனுமதியின்றி நடத்தப்பட்ட போராட்டத்தில் பங்கேற்று ஊர்வலமாக சென்றவர்கள், காந்தி மியூசியம் அருகிலேயே தடுத்து நிறுத்தப்பட்டனர்.

அப்போது மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பிய அவர்கள், சிஏஏ சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தினர். பேரணியில் திடீரென ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் ஒருவர் மயக்கமடைந்த நிலையில் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

போராட்டத்தையொட்டி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காவல்துறையினர் பெருமளவில் குவிக்கப்பட்டிருந்தனர்.

What do you think?

தட்கல் டிக்கெட்டில் முறைகேடு – 60 பேர் கைது

அடிச்சுட்டாய்ங்கடா எம்ஜிஆருக்கும் காவிச்சாயம்!!!